20
இதழ்கள்
20 இதழ்கள் அவளுக்குக் கெட்ட கோபம் வந்தது. நீதான் சொன்னே. நேத்திக்குத்தான் சொன்னே. அம்பிப் பாப்பா சிவப்பு ரோஜா, நான் வெள்ளை ரோஜா'ன்னு. அவள் அப்பா முகத்திலிருந்து திடீரென சிரிப்பு எல்லாம் பறந்தது. கெட்ட சமாசாரத்தைத் தெரிவிக்கத் தயாராபவன்போல் முகம் மாறிற்று. 'பிருகா, நான் சொன்னது தப்பு. நீ வெள்ளை ரோஜா யில்லை. நீ குழந்தையா பிரிக்கிறப்போ, உங்கம்மா உன்னைக் குப்பைத் தொட்டியிலிருந்து பொறுக்கிண்டு வந்துTட்டா.' பிருகா சற்று நேரம் சும்மாயிருந்தாள். அப்பா முகத்தில் சிரிப்பை அவள் கண்கள் தேடின. அங்கு இல்லாத சிரிப்பைத் தான் தனக்கு வருவித்துக்கொண்டு பார்த்தாள். "சும்மா சொல்றே அப்பா நீ! ஒள்ளாட்டிக்கு சொல்றே! "நிஜம்மா அப்பா முகத்தில் ஈ ஆடவில்லை. நீ வேணு மானால் பங்கஜத்தைக் கேட்டுப்பாரேன். பங்கஜம், பற்று அப்புறம் தேய்க்கலாம். ஒரு நிமிஷம்-இந்தப் பெண்ணைக் குப்பைத்தொட்டியிலிருந்துதானே எடுத்து வந்தது? "ஆமாமா, நான்தானே மேலே ஒட்டிக்கிட்டிருந்த குப்பை அழுக்கு எல்லாம் கழுவி அம்மாகிட்டே குடுத்தேன்!” ஆமாமா நான்கூடப் பார்த்தேனே! பங்கஜத்தின் பிள்ளை காபாவி முற்றத்தில் பம்பரத்தை கோஸ் எடுத்தபடி ஒற்றைக்காலில், கூத்தாடிக்கொண்டு, ஒத்துப்பாடினான். பயங்கரமான சந்தேகம் பிருகாவின் நெஞ்சில் விதை யூன்றிற்று. "நிஜமாகவா? "நிஜமில்லாமல் பொய்யா, இதோ உங்கம்மாவே வரா கேளேன்! சின்னா, பிருகாவை குழந்தையா, குப்பைத் தொட்டியிலிருந்துதானே நீ தூக்கிண்டு வந்தே? சின்னா. கூந்தல் முடிச்சில் ஈரத் துணியுடன், மடி ஜலம் பிடிக்க குடத்துடன் குழாயடிக்கு வந்தாள். அவள் முகத்தி தின் கடுப்பு இன்னும் மாறவில்லை. அதுக்கு சந்தேகம் வேறேயா? நம் வீட்டுப் பெண்ணா யிருந்தால் ஊர் வம்பெல்லாம் இழுத்துண்டு வருமா? சரியான