உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இதழ்கள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதழ்கள்

21

இதழ்கள் 21

கார்ப்போரேஷன் குப்பைத் தொட்டி. தெரியாத்தனமாகக் கொண்டு வந்துாட்டேன்." நான் என்ன சொன்னேன் பிருகா? இப்போ திருப்தி தானே? பிருகாவின் கண்கள் உள்ளுக்கிழுத்த திரிபோல் ஒளி மங்கின. உதடுகள் நடுங்கின. "நிஜமாவா அப்பா? குரு விசனத்துடன் கை விரித்தான். நான் என்னத் தையம்மா கண்டேன்? காலையில் உங்கம்மாவை ஆஸ்பத்திரி யில் விட்டு ஆபீஸுக்குப் போனேன். சாயந்திரம் பார்க்கப் போனேன், இதோ பாருங்கோ உங்கள் குழந்தை' என்று உன் அம்மா துணி மூட்டையிலிருந்து ஒரு முகத்தைக் காண் பித்தாள், எங்கேயிருந்து எடுத்து வந்தாள் என்று என்னத் தைக் கண்டேன். நீயே சொல்து.' முற்றத்திலிருந்து பங்கஜம் சத்தமில்லாத சிரிப்பில் பல்லைக் காட்டிக்கொண்டிருந்தாள். புகையிலைக் காவியேறிய வாய் தக்காளியறிந்த மாதிரி செவேலென்றது. ஒரு நிமிஷம் கட சும்மாயிருக்க முடியாத பிருகாவின் கைகள், மடியில் உயிரற்றுக் கிடந்தன. இப்போ உனக்கு யார் சொன்னா? வார்த்தைகள் கிணற்றுள்ளிருந்து வந்தன. யோர் சொன்னால் என்ன? ஒரு குருவி பறந்து வந்து காதுலே ஒதிவிட்டுப் போச்சுன்னு வெச்சுக்கேயேன். இல்லை உன் பட்டு மாமி மாதிரி ஒரு உண்மை விளம்பி போயேன். அடடா, சின்னா குழந்தையைப் பிடி,"பார்ட்டைம்வேலைக்கு நேரமாய்விட்டது. ஒரு நாளைக்கு இருபத்திநாலு மணி நேரத் துக்கு முப்பத்தி ஆறு மணி உழைக்கிறேன். இந்த வீட்டுக்கு அப்பவும் போதவில்லை. அது என்ன சாபமோ? 'வீட்டைக் குற்றம் சொல்லி என்ன பண்றது? அளவுக்கு மீறி பிறத்தியார் சுமையெல்லாம் தன் தலைமேல் வாங்கிண் டால், குபேரப்பட்டினம் கூட குடி முழுகித்தான் போகும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதழ்கள்.pdf/21&oldid=1247300" இலிருந்து மீள்விக்கப்பட்டது