பக்கம்:இதழ்கள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

இதழ்கள்

22 இதழ்கள் ஏதோ சொல்ல வாயயடுத்து குரு அடக்கிக் கொண் டான். சண்டைக்கு இப்போது நேரமில்லை. அவசரமாய் சட்டையை மாட்டிக்கொண்டு வெளியே சென்றான். பிருகா உட்கார்ந்த இடத்தைவிட்டு நகரவில்லை. தெரு வில் குப்பை வண்டி ஜன்னலுக்கெதிரே நின்றது. அதனுள் குப்பை மேட்டிலிருந்து செத்து விறைத்த ஒரு பூனையின் உடல் கிடந்தது. அதன் அடிவாய்ப் பற்கள் கேலியாய் இளித்தன. - தெருக்களின், சந்துக்களின் அடக்கமான நடமாட்டத் தைக் கடந்ததும் ஒரு திருப்பத்தில் திடீரென ரோடு’ தோன்றிற்று. அன்னிக்கு அப்பா பீச்சுக்குக் கூட்டிண்டு போனாளே, அப்போ அவளைக் கீழே தள்ளித்தே அந்த சமுத்திர அலைமாதிரி. ஒரு புது உலகத்தின் ஆரவாரங்கள் அவள்மேல் திடீரென மோதியதும் பிருகா பிரமித்து நின்றாள். காலடியில் பூமி அதிர்ந்தது. சரியான நாலு மூலைக் கூடல். குழல்களின் ஊதல்களும் ‘பூம்பூம்களும்' மணிகளின் அலறல்களும் வண்டிகளின் கர்ஜனைகளும் காதைப் பொளிந்தன. இத்தனைவித சப்தங் களின் நடு நாடியை அடைந்துவிட்டாற்போல் காதுகளில் 'ரொய்ஞ் என்று ஒரு கூவல் கண்டு தலை கிர்ர்ர்ர் திடீரென பலத்த க்றிச்சல்களின் சப்தம் கேட்டு; பிருகா துள்ளினாள். ஒரு ராகடிஸ் லாரி பின்னால் நின்றது. வாயில் வந்தபடி வைதுகொண்டே ட்ரைவர் அதினின்று குதித்து அவளிடம் ஓடிவந்தான். பிருகா வியப்புடன் அவளை நோக்கினாள். அச்சமற்ற அந்தப் பார்வையைக் கண்டதும் அவனுக்கே சிரிப்பு வந்துவிட்டது. ‘என்ன பாப்பா தனியா நிக்கறே; உன்னொடு ஒத்தரும் இல்லையா? பிருகா தலையை ஆட்டினாள். 'நானேதான் தனியா வந்தேன்.” 'நீ தனியா வரலாமா? "நான் ஒடிவத்துட்டேன்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதழ்கள்.pdf/22&oldid=1247301" இலிருந்து மீள்விக்கப்பட்டது