இதழ்கள்
23
இதழ்கள் 23
அரே ரே ரே! இதென்ன தொல்லையாப் போச்சு; எங்கிருந்து வந்தே? உன் வீடு எங்கே? - உலகத்தை தனக்குச் சொந்தமாக்கிக்கொண்ட ஒரு கை வீச்சில் பிருகா எங்கேயோ கையைக் காண்பித்தாள். இப்படிப் போய் அப்படிப் போய் இப்படிப் போய் அப்படிப் போய் இப்படிப் போனால் அங்கே எங்காம் வரும். அங்கேகூட ஒரு பப்பர்மிட் கடை இருக்குமே! அப்பாகூட வாங்கித் தருவாளே! - ட்ரைவர் திகைத்துப்போய் சுற்றும் முற்றும் பார்த்தான். அவன் லாரிக்குப் பின்னால் வண்டிகள் குவிய ஆரம்பித்து விட்டன. கோபமான ஊதல்கள் அவைகளினின்று கிளம்பின. சட்டென அவளைத் தூக்கிக்கொண்டு லாரியில் ஏறி பக்கத்தில் வைத்துக் கொண்டான். வண்டி கிளம்பிற்று. ‘என்ன பாப்பா, உன் வீட்டில் சாதம் போடறதுண்டா இல்லையா? கோழி இறக்கைமாதிரி இருக்கையே!” பிருகாவுக்கு ஞாபகம் வந்தது. எனக்கு பசிக்கிறதே மாமா! 'உனக்கு வயிற்றுக்குப் போட்டுவிட்டு போலீஸ் ஸ்டேஷ னுக்குப் போகலாம்." - - நான் மாட்டேன். நேக்கு பயமாயிருக்கு-பிருகா விசிக்க ஆரம்பித்தாள். ‘நல்லாயிருக்கே, வீட்டைவிட்டு ஓடிவரத் துணிச்சல் இருக்கு. சேப்புத் தலைப்பாவும் மீசையுந்தான் பயமிருக்கா. இல்லை, காற்றிலே பஞ்சு பறக்கறமாதிரி உன்னை இப்பவே உன்னிஷ்டப்படிக்கு விட்டுவிட வேணும் என்கிறையர்? அப்புறம் என்மாதிரிதான் ஆகிவிடுவாய்.” நீ எப்ப்டி ஆகியிருக்கே மாமா? தனக்கே புரிந்த தன் ரகஸ்யத்தில் வாயைப் பொத்திக் கொண்டு அவன் சிரித்துக் கொண்டான். 'உனக்குத் தெரிஞ்சுதான் ஆகணுமா? என் மாமியாரை பும் பெண்டாட்டியையும் கேளு-இதோ வீடுகூட வந்து விட்டது. இறங்கலாம்: