உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இதழ்கள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

இதழ்கள்

24 இதழ்கள் வாசல் திண்ணையில் காலை நீட்டிக்கொண்டு ஒரு பாட்டி உட்கார்ந்திருந்தாள். அம்மா படுக்கையெல்லாம் ஒண்ணு மேலே ஒண்ணாய் அடுக்கிட்டு, அதன்மேல் சிவப்பு போர்வை யால் மூடிடுவாளே, அதுமாதிரி பெருஸ்ஸா. அவர்களைக் கண்டதும் காலை மடக்கிக்கொண்டாள். 'யார் இது? ட்ரைவர் குல்லாயைப் பிசைந்துகொண்டு பாட்டியோடு பேச ஏனோ அவனுக்கு நாக்கு எழவில்லை. வழியிலே கண்டேன், இதுக்கு வழி தப்பிவிட்டது; வீட்டை விட்டு ஓடி வந்துடுத்தாம்.” 'இதென்னடிம்மா அக்ரமம்? இந்தக் காலத்துலே பிறக் கறப்போவே காலிலே சக்கரம்!” பாட்டி கைகளைக் கொட்டி தன் கன்னங்களைத் தாங்கிக் கொண்டாள். இது யார், எங்கேயோ பார்த்த மூஞ்சியா நெஞ்சுலே இடர்றதே-சுந்தரீ ஏ. சுந்தரீ!’ உள்ளேயிருந்து சுந்தரி வந்தாள். பிருகாவைப் பார்த்து ஆச்சரியத்தில் கைகளைக் குவித்துக் கொண்டாள். 'யார் இந்தப் பொண்ணு? அம்மா, இதென்ன மன்னியை அப்படியே உரிச்சு வெச்சிருக்கே!” பாட்டிக்குத் தூக்கிவாரிப்போட்டது. எழுந்து திண்ணையி லிருந்து கீழிறங்க முயன்றாள். ஆனால் நெஞ்சின் அவசரம் உடலுக்கு மூடியவில்லை. 'நீ யாருடி குட்டி? குரு பொண்ணா? ‘எங்கப்பா பேர் குருமூர்த்தி-அம்மா பேர் சின்னா-நான் பிருகா. என் தம்பி தங்கப் பாப்பா- பிருகா பாடம் ஒப்பித் தாள். பாட்டிக்குக் கண்கள் பெருகின. குழந்தையை வாரினாள். உலகத்தைத் தழுவும் அப்பெரும் அணைப்புள் பாட்டியின் உடல் மெத்தென்றது. ‘ஏண்டி என் கண்ணே, உனக்கு எப்படி இங்கே வரத் தெரிஞ்சது? வழி தப்பினாலும் வேறெங்கேயும் போகாமல் இங்கே எப்படி வந்தே? ஆனால், வேறெங்கே போக முடியும்? ரத்தம் இழுக்காதா? ஐயோ வயிறு ஒருபடி,உளுந்து ஆரைக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதழ்கள்.pdf/24&oldid=1247303" இலிருந்து மீள்விக்கப்பட்டது