பக்கம்:இதழ்கள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதழ்கள்

25

5

இதழ்கள் 2 லாம்போல், குழிவிழுந்திருக்கே வாடி கண்ணே சாதம் பிசைஞ்சு ஊட்டறேன்.” 'எனக்கு ஊட்ட வேண்டாம், நானாத்தான் சாப் பிடுவேன்.” 'இல்லேடி கண்ணு ஊட்றேண்டி, எனக்கு ஆசையா யிருக்குடி-உனக்கு ஊட்ற வயசிலே உன்னைவிட்டுப் பிரிஞ் சுட்டேண்டி -பாட்டி குரல் நசுங்கிற்று. ட்ரைவர் குல்லாயைப் பிசைந்துகொண்டு நின்றான். அவன் முகத்தில் அசடு வழிந்தது. பேச்சில் சகஜமாய்க் கலந்து கொள்ள ஏனோ அவனுக்கு நா எழவில்லை. பேந்தப் பேந்த விழித்துவிட்டு லாரியில் ஏறிக்கொண்டு போய் விட்டான். பாட்டி சிரிப்பில் உடல் குலுங்கையில், சிடுசிடுப்பில் சுந்தரிக்கு முகம் இறுகிற்று. 'உன் அப்பனுக்கு யாரையுமே குப்பைத் தொட்டியில் போட்டுப் பிரட்டித்தானே வழக்கம். அதான் அப்படிச் சொல்கிறான்.” ‘சுந்தரி, பொது பொறு, பெரியவாள் சண்டைக்கெல்லாம் குழந்தையை சாட்சிக்கிழுக்காதே, நியாயம் இல்லை.” நியாயமாம், நியாயம்? நியாயம் எங்கேயிருக்கு? வெச்சதே சட்டம், செய்றதேதானே தியாயமாயிருக்கு: ஆச்சே வருஷம் முனு. இருக்கோமா செத்தோமா என்று ஒரு நடை, அதுகூட வேண்டாம், அரையனா அட்டையிலே ஒரு வரி என்னை விடு. நான் தான் வாயாடி, ஜன்ம சத்துரு ஆயிட்டேனே. நீ பெத்த தாய்தானே! அவன் நன்னா படனும், நான் சொல்றேன். இப்போ தன் குழந்தையைப் பிரிஞ்சு படற வேதனையிலேதான் உன் மனசின் அவஸ்தை அவனுக்குத் தெரியனும்.” போடி அசடே, உனக்கு என் பிள்ளையை, நீ பிறந்தப் புறம், உனக்கு நினைவு வந்த பிறகுதான் தெரியும். எ என் குழந்தையை என் வயிற்றின் சூட்டிலிருந்தே அறி:ே ன். உன்னையும் அறிவேன். அவன் மனசை என்னைவிட நீ கண்டு இ.? ته "* iيتي

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதழ்கள்.pdf/25&oldid=1247304" இலிருந்து மீள்விக்கப்பட்டது