26
இதழ்கள்
26 இதழ்கள் வீட்டாயா? கழுத்தைப் பிடிச்சு நம்மைத் தள்ளினானா? நாமாத்தானே வந்துட்டோம்! நாம் மாத்திரம் அவனுக்குத் தணிஞ்சு போனோமா? - சுந்தரி முகம் கூரிட்டது. நீ தணிஞ்சு போய்க்கோ, நான் ஏன் தணிஞ்சு போகனும்? - "சுந்தரி அவன் உப்பைத்தின்னுட்டு அவனைக் கரிக்காதே, எண்ணம் கோணறப்போ, திருப்பி சரியா வெச்சுக்கோ. குரு நியாயவான், குரு நல்லவன்.” அது சரி, என்னிக்கும் உனக்கு உன் பிள்ளைதான் ஒசத்தி “எது ஒசத்தி எது தாழ்த்தி, ரெண்டும் என் வயத்ததுகள், தி ஒசத்தி இல்லியா? இருந்துதானே, நியாயமோ அநியாயமோ, உனக்கும் பரிஞ்சுண்டு, நான் என் பிள்ளையைப் பிரிஞ்சு வந்துவிட்டேன்." "இதோ பார் அம்மா, நீ சொல்லிக்காண்பிக்கவேண்டாம்; உன் பிள்ளை கிட்டே வேணும்னா போய்க்கோ.” போகத்தானே போகனும் நாளுக்கும் என்பெண் வீட்டிலே நான் இருந்துகொண்டு இருக்கமுடியுமா? அதுதான் நியாயமா? இப்போ நீயேதான் போன்னு சொல்லிட்டையே! அப்புறம் என்ன? கிழவி சிரித்தாள்; அம்மா என்னவோ பதட்டமா பேசிவிட்டேன்; மனசுலே வெச்சுக்காதே,” ‘சரியாப் போச்சு, நீ பேசறதையெல்லாம் மனசுலே வெச்சுக்கறதுன்னு ஆரம்பிச்சால், அந்த சுமையிலே, பூமியிலே எப்பவே புதைஞ்சு போயிருக்கணும், உனக்கு கட்டினவன் வயணமாயில்லை என்று ஆதியிலிருந்தே செல்லம் கொடுத்துக் கொடுத்து, நீ பாதி ஆண் பிள்ளையாவே ஆயிட்டே." யாராயிருந்தாலும் சரி, என்னால் அடிமை வாழ்வு நடத்த முடியாது. இதை என் புருஷ்னுக்கே நான் சொல்வேன். நன்னா சொல்லிக்கோயேன், எனக்கென்னவாம் இனி மேல் உன் நாக்குலே விஷம் சிந்தறதால்தான், உன்