உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இதழ்கள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

இதழ்கள்

2. இதழ்கள் இன்னலண்டை அவள் நின்றிருந்தாள். தோட்டத்தில் மாமரத்தின் உச்காணிக் கிளையில் ஒரு இலைக் கொத்தின் நடுவில் முளைத்தாற்போல் ஒரு பட்சி உட்கார்ந்திருந்தது. அதையே பார்த்தபடி அவள் சிந்தனையில் ஆழ்ந்தாள். மாடியேறி வரும் பூட்ஸ் சப்தம் கேட்டது. இரண்டுபடி மூணுபடிக்கு ஒரு தாண்டல், பள்ளிவிட்ட பையன் மாதிரி. அவள் முகத்தில் லேசாய் முறுவல் ஒளிபடர்ந்தது. அறை வாசல் பக்கம் முகம் திரும்பு முன், கதவைத் தடாலென்று திறந்துகொண்டு அவள் கணவன் வாசற்படியில் வந்து. நின்றான். பாதிக் கழற்றலில் கோட் தோள்மேல் தொங்கிற்று. “என்ன இன்னிக்கு வாசற்படி பாரா இல்லையா? வழி மேல் விழி வைத்துக் காத்திருப்புரயே? நாதன் வரக் கானேனே, ஆஆஆ.நாதன் வரக் காணேனே ஏ-ஏ-ஏ-” அவள் காதைப் ப்ொத்திக்கொண்டாள், மெய்யாகவே அவன் சாரீரம் கர்ண கடுரமாயிருந்தது. - 'இத்தனை நாழி காத்துத்தான் கிடந்தேன். இப்போத் தான் மேலே வந்தேன். நீங்களும் வந்தேள்.” - அவள் கண்கள் அவனைப் பட்சமாய்ச் சந்தித்தன. அவன் தலையில் முன்மயிர் அடையாய்க் கலைந்து கண்ணைக் குத்திக் கொண்டு புருவத்தின் மேல் சரிந்தது. விழிகள் கறுப்புத் திராrை போல் பளபளத்தன. திரை தள்ளினாற் போன்ற சிரிப்பில் பற்கள் காதுக்குக் காது அணிவகுப்பில் பிரகாசிக்கை யில் முகத்தை அப்படியே அனைத்துக் கொள்ள வேணும் போல் தோன்றிற்று. கோட்டை மூலையில் எறிந்துவிட்டுக் குட்டை நாற்காலி மேல் சரித்தான். நீளம் நீளமாய்க் கால்களும் கைகளும் நாற்காலி கொள்ளாமல் வழிந்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதழ்கள்.pdf/30&oldid=1247309" இலிருந்து மீள்விக்கப்பட்டது