உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இதழ்கள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதழ்கள்

31

இதழ்கள் 31

அதான் என்னடா காணோமேன்னு பார்த்தேன். மறு படியும் மயக்கம் கியக்கம்னு ஏதாவது வந்துடுத்தோன்லு கிலி பிடிச்சுண்டுடுத்து, இப்போத்தானே ரெண்டு மாஸம் சற்று விடாத்தியா யிருக்கோம். சரி, சரி. கொண்டா கொண்டாட’’ 'என்னத்தை' 'பசி, பசி, டிபன் டிபன் எப்படிப் பசிக்கிறது தெரியுமா? முகத்தையே பார்த்துண்டிருந்தால் பசியாறிடுமா? வசனமே உண்டே தெரியாதா? தாயா பிள்ளையா ஆனாலும் வாயும் வயிறும் தனி தான்னு! ஆப்டர் ஆல் நாம் ஆம்படையான் பெண்டாட்டிதானே?” 'வெறும் ஆம்படையான் பெண்டாட்டி!”-சிறு கசப்பு எங்கோ அவள் நாக்கு அடியிலிருந்து ஒலித்தது. வாயில் நகை யிருந்தாலும் கண்களில் நகையில்லை. வெறும் எனும் முதற் பதத்தை அனாவசியமாய்ச் சற்று அழுத்தினாற் போலிருந்தது. 'வெறும்னோ வெல்லம் போட்டோ ஆம்படையான் பெண்டாட்டியா நாலுபேர் நடுவிலே சுபமுகூர்த்தத்திலே, நிறைய செலவழிச்சுத் தாலிகட்டி, பத்து வருஷமா குடித்த னம் பண்ணியிருக்கோம். இதை இல்லை என்பான் யாரடா -யாரடா’. 'நீங்கள் பாடவேண்டாம். இன்னிக்குக்கூடப் பார்த் தேன்’ 'எதை” - 'நம் விவாக சுபமுகூர்த்தப் பத்திரிகையை, ஏதோ பொழுது போகல்லை. துணிப்பெட்டியை ஒழி ச் சே ன். பெட்டிக்கடிலே கிடந்தது.” 'இருந்ததா? ரொம்ப சந்தோஷம். இருந்துதோன்னோ? அப்படின்னா இனிமேல் நாம் டியன் சாப்பிடலாம். என்ன பண்ணிருக்கே?” கீழே கிடந்த கோட்டை எடுத்து ஆணியில் மாட்டினாள். "இன்னிக்கு ஒண்னும் பண்ணல்லே”. " أسسنtiسسي سـنiسمية ،

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதழ்கள்.pdf/31&oldid=1247310" இலிருந்து மீள்விக்கப்பட்டது