உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இதழ்கள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

இதழ்கள்

32 இதழ்கள் தடுக்கிவிட்ட எழுதுகோல் போல் அவன் குரல் சட் டெனக் கோணிக்கொண்டு போயிற்று. "ஒரு ரவை உப்புமாவுக்குக்கூட வழியில்லைய “இல்லை” அவன் முகம் விழுந்தது. "ராஜீ எனக்கு எப்படி பசிக்கிறது தெரியுமா? உன்னைக் கூடக் கடிச்சுத் தின்னுடுவேன். குழம்புஞ் சாதமாவது ஒரு உருண்டை உருட்டி, அதிலே ரெண்டு உருளைக் கிழங்குத் தானைப் பதிச்சு ஒரு தட்டுலே வெச்சுக் கொண்டாயேன். நாத்திரி சமையல் ஆகறவரைக்குமாவது தாங்கட்டும்’ 'மத்தியான மிச்சம் மீதாரியெல்லாம் ஒழிச்சு வேலைக் காரிக்குப் போட்டுட்டேன். இன்னிக்கு ராச்சமையல் கிடை யாது.” . 'இதென்ன ெய | ய தண்டனையாயிருக்கே! ஏன், சமையல்கார மாமி ஸ்ட்ரைக் பண்ணிட்டாரா?” 'இல்லை. அவளுக்கு நான் லீவு கொடுத்துட்டேன்”. "இதென்ன சூழ்ச்சி?’’ " சூழ்ச்சியொன்னுமில்லே. பயத்தம் கஞ்சி போட்டிருக்

-ణా

சற்று திகைத்துப்போய் அவளை ஏற இறங்கப் பார்த் தான். ஆனால் அவள் முகத்தில் துளி மாறுதல்கூட இல்லை. தலை குனிந்து, கொண்டைப் பூவைச் சரிப்படுத்திக் கொண் πρ" திடீரென அவள் செய்கையின் அர்த்தம் அவன் புருவங் ரின்மேல் விடித்தது. அந்த விடிவில் விளைந்த கோபம், ஆச்சரியம். துயரம் எல்லாம் ஒன்று சேர்ந்து ஒரே சமயத்தில் முகத்தைத் தாக்குகையில், விழிகள் மங்கி மறுபடியும் கொழுந்து விட்டன. உள்ளங்கையால் நெற்றியில் அறைந்து கொண்டான். 'ஆ கடவுளே? கடவுளே?-ஊசியில் கழுவேறிய புழு ಡಿ!TEು உடல் நாற்காலியில் நெகிழ்ந்தது. அந்த வேதனை எவ்வளவு தூரம் நிஜம், கேலியென்று புரியவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதழ்கள்.pdf/32&oldid=1247311" இலிருந்து மீள்விக்கப்பட்டது