பக்கம்:இதழ்கள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

இதழ்கள்

34 இதழ்கள் "நான் வேணும்னா கோவிலுக்கும் வந்துடறேன், ஆனால், ராஜி நீ ஏன் இப்படிச் செய்கிறாய்? 'நான் இன்னி முழுக்க உபவாஸம். நீங்கள் எனக்காக ஒரு நாளைக்கு ஒரு வேளை பட்டினியிருக்கக்கூடாதா?” "நான் உன்னை உபவாசம் இருக்கச் சொல்லவில்லை, நீ என்ன எனக்குச் சாமான் மிச்சம் பிடித்து வைக்கறையா?” அவள் பெருமூச்செறிந்தாள். உசிரில் உசிர், உசிர் இல்லையே! 'நம்பிக்கைதானே போற உசிருக்கும் உசிராயிருக்கு:ஆனால் அவள் குரல் நம்பிக்கையற்று ஒலித்தது. விசனத் திரை லேசாய் அவள் மேல் மடி பிரிந்து விழுகையில் திடீரென அவனுக்கும் அவளுக்குமிடையில் தொலை தூரம் நேர்ந்து விட்டாற்போலிருந்தது. திடீரென்று இப்படிப் புகுந்துகொண்ட கண் மறைவற்ற பிரிவு பொறுக்க முடிய வில்லை. ராஜீ!-’ அவளை எட்டித் தொடமுயன்றான். அவள் சட்டென ஒதுங்கிக் கொண்டாள். 'என்மேல் படாதேங்கோ-நான் மடி-’’ வாட் நான்ஸென்ஸ்' "எனக்கும் இங்கிலீஷ் தெரியும் அவள் குரல் தடித்தது. 'உங்கள் வசை எல்லாம் கொஞ்ச நேரம் மூட்டை கட்டி வெச் சுட்டு கையை, காலை, வாயை அலம்பிண்டு கிளம்புங்கோ-’’ அவன் மறுபடியும் எட்டினான், - 'நீங்கள் இப்போ என்னைத் தொட்டால், பலாத்காரம் பண்றேள்னுதான் சொல்லுவேன்-’ அவன் மொன மொணத்துக்கொண்டு கீழே சென்றான். ராஜி நெஞ்சு பஞ்சுதான். ஆனால் சில சமயங்களில் சுட்ட ரொட்டிமாதிரி மேலுக்கு இப்படிக் கடினமாய் ஏன் இருக் காளோ? அவள் ஜன்னல் பக்கத்தில் போட்டிருந்த பெஞ்சியின் மேல் உட்கார்ந்தாள். அசதியாயிருந்தது. கண்கள் ஒரு முறை வானத்தின் நீலத்தைத் துடைத்தன. மாமரத்தின் உச்சாணிக் கொம்பில் இலைக்கொத்தின் நடுவில் முளைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதழ்கள்.pdf/34&oldid=1247313" இலிருந்து மீள்விக்கப்பட்டது