இதழ்கள்
35
இதழ்கள் 35.
திருந்த பட்சி எப்பவோ பறந்துவிட்டது. அவள் சிறு ஏமாற்றம் அடைந்தாள். பார்வை மரத்திலிருந்து தெரு மேல் தாழ்ந்தது. அப்போதுதான் ஒரு பால்காரன் ஒரு பசுவை ஒட்டிச் சென்றான். அப்பா, என்ன வளர்த்தி! என்ன வளர்த்தி!! எடுத்துப்போடும். ஒவ்வொரு அடிக்கும் கழுத்துச் சதங்கை :ஜல் ஜல்'லெனத் தாளம் போட்டது. கன்றுக் குட்டி பின்னாலிருந்து பின்னங் கால்களுக்கிடையில் முகத்தை முட்டி, முட்டி, மடிக்காம்புகளை வாயில் பற்றிப்பற்றி ஊட்ட முயன்று ஒடிக்கொண்டிருந்தது. புடலம் பிஞ்சுபோல் தொப்புள் கொடி சுருண்டு நுனி ஆடியது. சொம்பு மடிக் அவள் கைகள் மார்மேல் குவிந்து அழுந்தின. மேல் உதட் டைப் பற்கள் அழுத்திக்கொள்கையில் உதடு வெளுத்தது. ஜன்னல் கம்பிகளுக்குப் பின் அவள் இப்பொழுது உட்கார்ந் திருக்கையில், இவ்வுலகமே உடம்பே சிறைபோல் இருந்தது.
- ராஜீ புறப்படறபோது சிடு சிடுன்னு இருந்ததே யொழிய, அப்புறம் குஷியாய்த்தானிருந்தது.”
"உங்களுக்குச் சந்தோஷம்னா எனக்குச் சந்தோஷம்-' ஆஹா என்ன பதிவிரதா தர்மம் ராஜி இன்னிக்குத் தான் கவனிச்சேன், கொசுவக்கட்டு உனக்கு எவ்வளவு நன்னா அமைஞ்சிருக்குத் தெரியுமோ? நீ இருக்குற வாட்ட சாட்டம், உயரத்திற்கு பாங்கப் பதிய ஜோராயிருக்கு. அம்மனுக்கு அலங்காரம் பண்ணின மாதிரி-’’ அவசரமாக அவன் உதடு மேல் அவள் விரல் பொத்தினாள். - 'அபசாரம்-அபசாரம்-அப்படி ஒப்பிட்டுப் பேசா தேங்கோ’-அவள் விரல்கள் அடியிலிருந்து அவன் உதடுகள் பிடிவாதமான பேச்சில் அசைந்தன. "எங்கள் ஊர் அம்மன் உன் உயரம் இருப்பாள். தென்ன்ஞ் சோலைக்கு நடுவே கோவில், உன் உயரம் இரு 、 அரக்குப் புடவையைக் கட்டி கண்ணாரழு சாத்திவிட்டால்,-ஆஹா சங்கிலியிலிருந்து ஆடு