36
இதழ்கள்
36. இதழ்கள் மங்கிய அகல் வெளிச்சத்துக்கும்-கர்ப்பக் கிரஹத்து இருட் டுக்கும் அம்பாளின் உதடே அசையற மாதிரியிருக்கும்!” அவளுக்குப் பிடரி புல்லரித்தது. -
- ஏதேது, நீங்கள் நாஸ்திக சிகாமணியாச்சே. ஆனால் லெக்சர் அமர்க்களமாயிருக்கே!-”
அவனுக்குக் காதோரங்களில் கோபரத்தம் குறு: குறுத்தது. 'நீ என்னைக் கேலி பண்ணவேண்டியதில்லை, என்னு டைய நாஸ்திகத்தைப்பத்தி. ஏன்னா, உனக்கு ரொம்ப்த், தெரியிமோன்னோ?-” . . . . . . 'இல்லை-இல்லை, சும்மா சீண்டினேன். இன்னிக்கு நாம் சண்டை போட வேண்டாம். கோவிலுக்குப் போயிட்டு வந்து வெள்ளிக்கிழமையு மதுவுமா சண்டை போட்டால், எனக்கு மனஸ் ராமுழுக்கத் தொண தொணன்னு இருக்கும்.” 'ரொம்ப சரி; நானும் சண்டை போடல்லை. சமத்தா யிருப்போம்-” சிரித்துக்கொண்டே அவன் மார்மேல் శుభ్ళ } வைத்தாள். "உஷ்-என்னைத் தொடாதே-நீ மடி-” “மடி இனிமேல் அம்மாடிதான். இனிமேல்தான் படுத்துக்கப்போறோமே. இன்னிக்கு உங்களுக்கு ரொம்பப் பசியோன்னோ?” - "பரவாயில்லை. அதான் பாயலம் குடிச்சாச்சே. அது கூட ரொம்ப நன்றாயிருந்தது. பால் மணம் தூக்கலாய் தித்திப்புத்தான் போறாது.” "அது பாயஸ்மில்லை. கஞ்சி. சரி விளக்கை அணைச் சுடறேளா?’ r மெத்தென இருள் அவர்களைச் சூழ்ந்தது. சற்று நேரம் இருவரும் மெளனமாயிருந்தனர். தலைக்குப் பின்னால் கை களைக் கோத்துக்கொண்டு அவன் சாய்ந்திருந்தான். செந்நிலா மாமரத்தின் இலைக் கூட்டங்களுக்குப்பின் உதயமாகிக் கொண்டிருந்தது, .
- ராஜீ துரங்கிட்டிையா?”