38
இதழ்கள்
38 இதழ்கள் கண் காட்டி உதட்டைப் பிதுக்கியது இப்பொழுது நெஞ்சை படைத்துக்கொண்டு நினைவில் எழுந்தது. இருவரும் ஒரே விஷயத்தைப்பற்றித்தான் சிந்தித்துக் கொண்டிருந்தனர். ஆனால், அவரவர் வழியில் அதனாலேயே ஒருவருக்கொருவர் பேச்சுத் தொஇக்க இருவருக்கும் பயம். பெருமூச் செறிந்து அவன் கட்டிலினின்றிழிந்து ஜன்ன லண்டை சென்றான். -ராஜி ராஜீ! இங்கே வாயேன்!’ க' என்ன?” ராஜியிடம் என்றுமே அவசரம் கிடையாது. சாவதான மாய் எழுந்து வந்து அவன் பக்கலில் நின்றாள். கஜாம்பாள் மொக்கு கட்டிட்டாள்.'
- ஏதோ? ஏதோ?”
அவன் பரபரப்பு அவளையும் பிடித்துக்கொண்டது. அவன் கை சுட்டும் வழி அவளும் நோக்கினாள். சில்லென்று காத்து கத்திமுனை போல் முகத்தை வெட்டியது. கஜாம்பாள் அவர்களிடையே பிரத்யேக அர்த்தத் துடன் அடிபடும் கேலி வார்த்தை. யாரோ என்னத்தையோ சொன்னார்கள் என்று அந்த செடிக் கன்றை பெரிய விலை கொடுத்து வாங்கிவந்து தோட்டத்தில் வாகான இடம் பார்த்து, வேளை பார்த்து, சகுனம் பார்த்துத் தன் கையாலேயே நட்டான். செடியும் ஆரம்ப ஜோரில் நன்றாக மதமதவென்று வளர்ந்து, திடீ. ரென்று ஒரு காரணமும் தெரியாமல், வளர்ச்சி நின்று விட்டது, என்ன எருவிட்டும், எப்படிப் பராமரித்தும் பயனில்லை. அதற்குக் கஜாம்பாள் என்று பெயர் வைத்தாகி விட்டது. 'இன்னிக்குக் கஜாம்பாள் பூக் கட்டினாளோ?’ என்று கொஞ்ச நாளைக்கு ஆபீஸிலிருந்து வருகையிலேயே முதல் கேள்வியாயிருந்தது. இல்லையே, இல்லையே!” என்ற பதிலைக் கேட்டுக்கேட்டுப் புளித்துப்போய், பிறகு அந்தக் கேள்வியும் நாளடைவில் பேச்சில் மறந்து செடியும் நினைவில் மறைந்துவிட்டது.