பக்கம்:இதழ்கள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

இதழ்கள்

40 இதழ்கள் போல் இந்த ஒரு வாரமா பஸ்ஸில் அத்தனை இடம் இருக் கையில் என்னண்டை ஏன் வந்து உட்காரனும்? முழியை வேறு உருட்டு உருட்டுன்னு உருட்டறதைப் பாரு, விழி அவளுக்கு அழகுதான். - கையிலே புஸ்தகக் கட்டையும் டிபன் பாக்ஸ்ையும் பார்த்தால் வாத்தியாரம்மாளாயிருப்பான்னு நிவனக்கிறேன். காலம் எப்படி ஆயிடுத்து பாரேன். கலியாணமாகாத குறை யினால் அவளும் நமக்குப் போட்டியா வயிற்றுப் பிழைப்புச் சண்டையில் சரிசமனா இறங்க வேண்டியதா இருக்கு. கலியான மாகாட்டா அது ஒரு குறை, கலியாணமானால் அது இன்னொரு குறை. ஆனால் அவளுக்குக் கலியாணமாகி யிருக்கிறதென்று நினைக்கிறேன். கழுத்திலே மஞ்சள் கயிறு தொங்கறது. ஆனால் நோம்புச்சரடாயும் இருக்கலாம். ராஜியை ஒத்தரும் பீட்பண்ண முடியாது, அவள் பட்டினி கிடக்கிறதோடல்லாமல், பிறத்தியாரையும் பட்டினி போட லாமோன்னோ? வயிறு நிரம்பாவிட்டாலும் காய்ந்த வயிறு நனையுமோன்னோ? என்ன விரதமோ, என்ன ஆசாரமோ? தெய்வ பக்தியோ! மனுஷத் தன்மையில்லாத தெய்வத் தன்மை எனக்கு வேண்டாம். இந்த ராஜி வெறும் அசடு, தெய்வத்தையே நம்பிண் டிருக்கு, புத்து வருஷமாயும் புத்தி வல்லே. தெய்வத்தின் வழிக்கு நாம் போகாமல் இருந்தால் அதுவும் நம் வழிக்கு வராமல் அவரவர் வழியில் அவரவர் நிம்மதியா ரோட்டு பிராக் ஆகாமல் லோக காரியம் நடந்துகொண்டேயிருக்கும். இந்த உண்மையை அசட்டு ராஜி என்றைக்குத் தெரிஞ் சுக்கப் போறாள்? ராஜி அசடு இல்லாமல் என்ன சமத்தா இருந்தாலும் என் ராஜி, எல்லாமே அதிதான் ராஜிக்கு. 'யாரோ பசி குளிர் குழந்தைன்னா இந்த வேளைக்கு இந்தப் பித்துக்கொள்ளியைத் தவிர யார் கீழே இறங்குவா? பாரேன் போனாள், போனாள் இன்னும் திரும்பி வரவில்லை. இவளைத் தேடிண்டு நான் கீழே போறதா என்ன தெரி யல்லையே; இப்படி ராக் கூத்தடிச்சா என்ன பண்றது? அடே யப்பா என்ன பசி பசிக்கிறது!’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதழ்கள்.pdf/40&oldid=1247319" இலிருந்து மீள்விக்கப்பட்டது