உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இதழ்கள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதழ்கள்

41

இதழ்கள் 4t

யோசனை இந்தக் கட்டத்தை அடைந்த சமயம் ராஜியும் மேலே வந்து போர்வையை இழுத்துப் போர்த்துக்கொண் டாள். அவள் ச த் த ம் போடாவிட்டாலும் கட்டிலின் tஸ்ப்ரிங்குகள் கிறிச்சிட்டன. 'ஒன்றும் இல்லைன்னு சொல்லி அனுப்பிச்சுட்டு வர இவ் வளவு நாழியா?” * 'அனுப்பறதா? குழந்தையும், கையுமா இந்தக் குளிரி லேயா? ஒரே பச்சை மண், பிறந்து இன்னும் ஒரு வாரம் ஆகி யிருக்காது.” 'சம்பந்தியம்மாளைக் கூ ப் பி ட் டு இ. பச ர ம் பண்ணினையா?” "ரேழியில் படுக்க வெச்சிருக்கே, ரெண்டு கோணியைக் கொடுத்து, ஒரே பரிதாபக் கதை’. . - 'சரி சரி;துரங்குவதற்குநேரமாயிடுத்துன்னு நான் நினைக் கிறேன். நாளைக்கு ஆபீஸுக்குப் போகணும்.” . அவன் சொல்வதை அவள் காதில் வாங்கிக் கொள்ள வில்லை. 'பார்த்தால் சிறுசாயிருக்காள். ஆனால் அவளுக்கு ஏற் கெனவே மூணுகுழந்தைகள் இருக்கலாம். மூணும்பெண்ணாம். நாலாவதும் ஏன் பெண்ணாய்ப் பெத்தேன்னு புருஷன்காரன் வீட்டைவிட்டு விரட்டிட்டானாம். லோகத்திலே இது மாதிரி யும் மனுஷாள் இருக்கா, பாருங்கோ-’ "ஏன் என்மாதிரி இருக்கிறபோது அவன் மாதிரி இருக்கப் படாதா?’’ - 'அவளும் உங்கள் மாதிரிதான் பேசுகிறான். அவங்க மேலே கஸ்டம் பண்ணிக்கறத்துலே என்னம்மா இருக்குது? வயித்துப் புளைப்பு அவ்வளவு கஸ்டமா இருக்குது. ரொம்ப கஸ்ட ஜீவனம்மா!-’ 'சரி என்னைக் கொஞ்சம் துரங்க விடறையா?” சொன்னானேயொழியத் தூக்கம்வரவில்லை. காலிவயிறு பழக்க மில்லாததால் தானோ என்னவோ வெகு நாழிபுரண்டு விட்டுப் பிறகு கற்றுக் கண்ணயர்ந்தான். அரை நினைவும் இ-3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதழ்கள்.pdf/41&oldid=1247320" இலிருந்து மீள்விக்கப்பட்டது