42
இதழ்கள்
42 இதழ்கள் கால் நினைவுமாய் மனம் நிம்மதியற்ற உறக்கத்தில் நழுவுகை யில், நடுநிசியின் அரவடக்கத்தில் உலகமே தன் நெஞ்சில் கையை வைத்துக்கொண்டு ஏதோ ஒரு மகத்தான நேருதலை எதிர்பார்த்தபடி அதன் எல்லைக்கோட்டின்மேல் கட்டைவிரல் துனிமேல் நின்று எட்டிப் பார்த்துக் காத்திருந்தாற் போல் தோன்றிற்று. அப்பொழுது காம்பவுண்டுச் சுவரோரத்தில் ஆடிக் கொண்டிருந்த மொக்கு அரை நொடியில் அசாத்தியமாய்ப் பெரிதாகி, மனமில்லாது வெளிப்படும் ரகசியம் போல், இதழ் கள் ஒவ்வொன்றாய் அவிழ்ந்து பிரிந்து படிப்படியாய்த் திறந்தன. அதனின்று ஒரு உருவம் வெளிப்பட்டது. நடு நிசியின் நிலவொளியிலிருந்து ஒழுகும் பால் வெள் எத்தில் இதழ்களின் படிகளினின்று கால்மேல் கால் வைத்து அவள் ஸ்நானத்திற்குச் கீழிறங்குகையில், அவள் பிறவியின் கன்னித் துய்மையே அவள் மானங்களைக் காக்கும் கவசமாய் அவளைச் சூழ்ந்தது. சிறுத்தை சோம்பல் முறித்தாற் போல் கைகளும் கால்களும் உடலும் குளிப்பில் அசைகையில் ஆச்சரியமான அழகுகளைச் சிந்திக்கொண்டு அந்தரத்தில் வளைகோடுகள் நெளிந்தன. தோள்களும் முதுகும்.அடிவயிறும் தொடைகளும் வழுவழுத்து மின்னின; சிரித்த முகம் அவன் பக்கம் திரும்பிற்று. அவன் உடல் மயிர்க் கூச்செறிந்தது. "-!: חrעי* கீழிருந்து அவள் குரல் அவன் கனவைக் கத்தரித்து வெட் டிற்று. திடுக்கென விழித்துக்கொண்டான். ஜன்னலுக்கு வெளியே வானம் நன்கு வெளுத்து விட்டது. கண்ணைக் கசக்கிக் கொண்டே கீழிறங்கிச் சென்றான். கண்கள் எரிந்தன! ராஜி கைகளைக் கன்னத்தின் மேல் வைத்து நின்றாள். ஆச்சரியத்திலும் கோபத்திலும் அவள் கண்கள் பெரிதாகி யிருந்தன. விழிகள் சுழன்றன. என்ன ராஜி?” -கொடியில் உலர்த்தியிருந்த புடைையைக் காணோம். பாயலம் பண்ணிட்டு முத்தத்தில் தேய்க்கப் போட்டிருந்