உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இதழ்கள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

இதழ்கள்

46 இதழ்கள் அவன் சொல்லச் சொல்லக் கண்ணிர் புரண்டது. அவன் மேல் விழாதபடி தடுத்து, வழித்து உதறினாள். 'இல்லை அடா கண்ணா: குழம்புக்கு வெங்காயம் நறுக்கி னேன் அல்லவா? அதுதான் கண்ணாலும் மூக்காலும் கொட்டு கிறது. இரு, வந்துவிட்டேன், இதோ ஒரு நிமிஷம்!” பின் கட்டில் இருந்த குழாயடிக்கு அவள் போய் இன்னும் சேரவில்லை. 'அம்மா! அம்மா!’ ‘ஏண்டா கண்ணா: அவளுக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது. என்னவோ? ஏதோ? உடல் குலுங்க ஓடி வந்தாள். அவன் மூக்கைக் கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டிருந் தான்; அவள் மூக்கிலும் நெடி ஏறுகையில்தான் புரிந்தது. ஐயையோ?” சமையலறையுள் ஓடினாள். லேசாய் மூச்சுத் திணறியது. இப்போதே கொஞ்சம் அப்படித்தான். அடுப்பி லிருந்து உருளியைக் கீழிறக்குகையில் முகத்தில் ஆவியடித்து விட்டது. பாத்திரத்தை 'ணக்கென்று கீழே வைத்தாள். விரல்களைச் சுட்டு விட்டது. 'அம்மா!' 'இரு சற்றே சும்மா சவலைக் குழந்தை மாதிரி சும்மா அம்மா அம்மா என்று அடித்துக் கொண்டு!” அவளுக்கு எரிச்சலாக வந்தது. வெள்ளிக்கிழமையும் அதுவுமாய், அச்சானியமாக, போதும் போதாததற்கு இதுவும் மனசைச் சஞ்சலப் படுத்துகிற மாதிரி ஏதாவது கேட்டுக் கொண்டு-; "ஐயோ அம்மா கண்ணைத் திகுதிகுவென்று எரிகிறதே, சதை வழன்ற மாதிரி. நேற்றுத் தானே அழகாக இருக்கிறாய் என்று சொன்னார்? இதென்ன, கொண்டவன் கண்கூட ஆகாதா என்ன? அவசரமாக வெளியே வந்து கண்ணாடியில் பார்த்துக் கொண்டாள். ஐயோ! பார்க்கச் சகிக்கவில்லை. அழுகையில் கண் மையெல்லாம் கன்னத்திலே கரைந்து ஓடிக் காய்ந்து போய், முகத்திலே கலம் அழுக்கு ஏறிக் கிடக்கிறது. விழி மாத்திரம் முகத்தில் பாதிக்குமேல் அடைத்துக் கொண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதழ்கள்.pdf/46&oldid=1247325" இலிருந்து மீள்விக்கப்பட்டது