பக்கம்:இதழ்கள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

இதழ்கள்

43 இதழ்கள் புன்னகை முகத்தில் இளகுகையில் தனக்குத் தானே அது அநுபவித்துக் கொள்ளும் ரகசியந்தான் என்ன? ஜலத்தில் முகத்தின் நிழல் தெரிவது போல, அவன் முகத்தில் அவள் அகத்தைக் கனடாள். இந்தக் கண்ணாடியில் எதையும் ஒளிக்க முடியாது, கீழிமைச் சதை நிழலோடு பின்னிய வருட ரேகை, மோவாய்க் குழியில் கொசுவிலும் பாதியாய் வருடக் கணக்கான பூச்சுக்களுக்கு அடியில் புதைந்து கிடந்த ஒரு சிறு மறு. உதட்டோரங்களில் சதையோடு இழைத்த பூனை மயிர்க் கால்கள் இவற்றில் எதையும் ஒளிக்க முடியாது. தன்னையும் பிறரையும் ஏமாற்றிக் கொள்ளும் கறுப்பும் வெள்ளையு மான ஏமாற்றங்கள், இவன்எதிரில் அத்தனையும் எவ்வளவு ஏமாற்றங்களாய் அவற்றின் சதைகளை உரித்துக் கொண்டு தம் தம் சுய மேனியில் நின்றன. வயசு, வயசுக்கேற்ற முதுமை, முதுமைக்கேற்ற நைவு, நைவுக்கேற்ற அழிவு, இந்த நியதியின் அவசியம், அதன் இதவு புரிந்தும் புரியாததுமாய் எண்ண. எழுச்சிகள் அவள் மகன் நெஞ்சோட்டத்தில் புரண்டு அடித்துக் கொண்டு வருகையில் அவற்றின் அடிவயிற்றின் ஒளிகளில் உட்கணங்கள் கூசின. - அவள் ஒன்றும் புத்திக் கூர்மைக்குப் பேர் எடுத்தவள் அல்ல. அப்பா அடிக்கடி சொல்வார்: அஞ்சனாவும் சரி சரி, ஒன்றும் வேண்டாம். நன்றாய்க் கரி பிடித்த வாணாய் ஒன்று அவளிடம் போட்டுவிடு, இன்று முழுக்க அவள் பாட்டுக்கு ஆனந்தமாய்த் தேய்த்துக் கொண்டிருப்பாள், ஆனால் இவன் எதிரில் அவளுக்கு இதுவரை பழக்கம் இல்லாத எண்ணங்கள், அவற்றின் வேகத்தில் தாமே அமைத்துக் கொண்டே பழக்க மில்லாத பாஷையில் வெளிப்படுகையில் அவளுக்கு அவற்றைப் பிடிக்கவில்லை; பயமாக இருந்தது. அவள் ஊஞ்சலில் படுத்திருந்த அந்த நிலையில் நிராதரவைக் காண்கையில் தாங்க முடியாத தாபம் அவளைத் திடீரென்று கவ்விற்று. வந்து அவனருகே அமர்ந்து செல்ல மாய் மூக்கை அவன் கன்னத்தில் தேய்த்தாள். r. 'துரங்குகிறாயாடா, கண்ணா? அவள் உதடுகள் அவன் கண்களை ஒற்றின. பேச்சு மூச்சோடு மூச்சாய் ஒடுங்கிற்று.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதழ்கள்.pdf/48&oldid=1247327" இலிருந்து மீள்விக்கப்பட்டது