பக்கம்:இதழ்கள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

இதழ்கள்

52 இதழ்கள் 'என்னடா கண்ணா? எப்போதடா நீ ளொள் ளொள்' ஆனாய்?” - 'இல்லை அப்பா, என்னைக் கட்டிப் பிடிக்கிறாள் அப்பா!' பையன் தேம்பி அப்பா காலை இறுகக் கட்டிக் கொண்டான். அப்பா அவனைக் கையைப் பிடித்து வந்து ஊஞ்சலில் அவள் அருகே உட்கார்ந்தார்; அவள் எட்ட ஒதுங்கிக் கொண்டாள். ஊஞ்சல் சங்கிலியை அனைத்துக் கொண்டு ஒரமாய் ஒடுங்கிக் கை நகங்களைப் பார்த்துக் கோபத்துடன் சிந்தித்தபடி இருக்கையில், இப்பொழுது அவள்தான் குழந்தையாக இருந்தாள். புருவங்கள் நெரிந்தன. குவிந்த இதழ்கள் போல் அதரங்கள் பிதுங்கின. அவள் உதடுகள் துடித்தன, சிரமத்துடன் அடக்கிக் கொண்டாள். 'ஏது உங்கள் அம்மாவுக்கு இன்றைக்கு ஏக பு-ர்-ார்டர் ஏதோ முணுமுணுத்தாள். "உர்-ர்.ர்.ர்-என்ன புலி உறுமுகிறது?” அப்பா கேலியாய் உறுமியதும் பையன் களுக் கென்று சிரித்து விட்டான். அவள் ஊஞ்சலில் தன் ஒரத்திலிருந்து சீறினாள். ‘புலி வருகிறது, புலி வருகிறதென்று புலியேதான் வந்து விட்டதே!’ “வந்திருப்பது உனக்குப் புலியாகத்தான் படவேணுமா?’’ அவன் குரல் தழுதழுத்தது; கெஞ்சுவதுபோல் &n-L-. இருந்தது. 'இந்தச் சாமர்த்தியம் எல்லாம் யாருக்கு வேண்டிக் கிடக்கிறது? நான் ஏமாந்து போனேன், என் பிழைப்பு என்றைக்கும் காலைச் சுற்றின பாம்புக்குப் பயந்து பயந்து சாகிறதாகவே ஆகிவிட்டது. ஒன்றைத்தான் வைத்துக் கொண்டு வாழ்நாளுக்கும் புழுங்கிக் கொண்டிருக்கிறோமே, போதாதா?” கைகளில் முகத்தைப் புதைத்து கொண்டு அழுதாள். அவன் இருகைகளையும் ஊஞ்சல்மேல் ஊன்றிக் கொண்டு தரையை நோக்கியபடி உட்கார்ந்திருந்தான். பையனுக்குப் பயமாக இருந்தது. தாய்க்கும் தகப்பனுக்கும் நடக்கும் יין w

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதழ்கள்.pdf/52&oldid=1247331" இலிருந்து மீள்விக்கப்பட்டது