பக்கம்:இதழ்கள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

இதழ்கள்

$4 இதழ்கள் கேட்டோம். அவன் பாட்டி செத்துப் போய்விட்டாளாம். வெகுநாள் சீக்காம், அவளைப் பார்க்க பயமாக இருந்ததாம். எல்லோரும் அழுதார்களாம். குழந்தைகளை யெல்லாம் எதிர் விட்டுக்கு அனுப்பிவிட்டார்களாம்.” "ஓஹோ!' 'அன்று ராத்திரியே இன்னொரு பையன் வீட்டில் அவன் அக்காவுக்குப் பெண் குழந்தை பிறந்ததாம். ஒரே கொண் டாட்டமாம். எங்களுக்கெல்லாங்கூட வாதங்கொட்டை, கல் கண்டு. லட்டு எல்லாம் கொண்டுவந்து தந்தான். முதல் குழந் தையாம். பெண் குழந்தை, செல்லக் குழந்தை...” "ஓஹோ!' "அப்பா, செத்துப் போகிறதென்றால் என்ன? பிறக்கிறது என்றால் என்ன?” - - முற்றத்தில் மாலை, இரவின் எல்லைக்குள் கடந்து கொண்டிருந்தது. நாள் முடிவில் உலகம் பொட்டலமாய் மடிந்து கொண்டிருந்தது. கூடத்துச் சுவர்களில் கரைகள் ஒன்றுடன் ஒன்று குழைந்து உருவங்கள் எழுந்தன. முற்றத்தில் கூரையோட்டின் அப்பாலிருந்து எட்டிப் பார்க்கும் மாமரத்தின் கிளைகளிலிருந்து இருள் சரங்கள் இறங்கி மெதுவாய் ஆடி அசைந்தன. அதன் எண்ணற்ற இலைகளைத்தானே தனித் தனியாய்ச் சித்தரித்ததுபோலத் தென்றல் அவைகளினூடே கோத்து வாங்கியது; அவன் பெருமூச்செறிந்தான், "நிஜமான சாவோ நிஜமான பிறப்போ இரண்டுள் ஒன்றேனும் இருந்தால்தான் தேவலையே! அவன் தனக்குத் தானே அலுத்துக்கொண்டான். ஆனால் வார்த்தைகள் பையனுக்கு எட்டிவிட்டன. - "நிஜமான சாவு, நிஜமான பிறப்பு என்று இருக்கிறதா என்ன?” “ஊம்.’’ குழந்தையின் கேள்வி சிரிப்பை மூட்டிற்று. எங்கென்று தெரியவில்லை; விழியோரங்களின் சதைச் சுருக் கங்களிலா, நெஞ்சிலா, வயிற்றிலா, மார்பிலா, தாடை களிலா, கன்னங்களின் குழிவுகளிலா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதழ்கள்.pdf/54&oldid=1247333" இலிருந்து மீள்விக்கப்பட்டது