பக்கம்:இதழ்கள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதழ்கள்

57

இதழ்கள் 57

மடியில் தன் தலையை வைத்துக் கொண்டாள். அவ்வளவு தான் செங்குத்தான பாறை நுனியிலிருந்து யாரோ தள்ளி விட்டாற் போல், மூர்ச்சை உடல் நினைவை அடித்துக் கொண்டு போய் விட்டது. கூடத்தில் சுவாமி விளக்கில் சுடர் பொரிந்தது. X Х X X எல்லா மின் எல்லைக் கோடுகள் எல்லாம் அழிந்தபின் எஞ்சிய இந்த உள் பிரக்ஞை நிலையில் புரியாதது தெரியாதது எது? புரியவும் தெரியவுமே என்ன இருக்கிறது? இதில் நீ இல்லை. நான் இல்லை; ஆண் இல்லை, பெண் இல்லை; முன் இல்லை, பின் இல்லை; எப்போதும் இப்போதே, எதுவும் எல்லாமும் இதுவே. "எங்கும் உயிர் வெளிச்சத்தின் குளிர்ப்பிழம்பின் வியா பகமாய் விளங்குகிறது. இவள் ஒரே தேஜஸ்வியாகத் திகழ் கிறாள். இவள் மார்வுள் இவள் விளக்கு எரிகிறதுடன் இவள் வயிற்றுள் அகன்று வளர்ந்துகொண்டேயிருக்கும் பொறி ஒளி கண் கூசுகிறது. ஆனால் இதுவும் நானும் இம்மாதிரி என் தாயின் வயிற்றுள் சுருண்டு படுத்திருந்தது இப்போது போல் இருக்கிறது. நான்-’ - யாரோ அவனைத் தோளைப் பிடித்து உலுக்கினார்கள். "இதோ பாருங்களேன், இதோ பாருங்களேன். ஐயோ?” அப்பா-அப்பா' மனைவி மகன் குரல்கள் எங்கோ தொலை தூரத்தில் கிணற்று வெளியிலிருந்து வந்து அவன் மேல் கொக்கிபோல் விழுந்து அவனை வெளியுணர்வுகளுக்கு இழுத்தன. பொருள் கள் வெடுக்கென்று தம்மை உதறிக்கொண்டு பழைய நிலையில் சமைந்தன. அவனுக்கு வியப்பாக இருந்தது. இதென்ன துரங்கிக் கொண்டிருக்கிறேனா, விழித்துக் கொண்டிருக் கிறேனா? (துரங்குகிறதென்றால் என்ன, விழித்துக்கொண்டிருப்பது என்றால் என்ன? இ-4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதழ்கள்.pdf/57&oldid=1247155" இலிருந்து மீள்விக்கப்பட்டது