பக்கம்:இதழ்கள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

இதழ்கள்

58 இதழ்கள் 'என்ன நீங்கள் திடீரென்று அப்படி ஆகிவிட்டீர்கள்? முகம் வெளுத்துப் போய், விழிநிலை குத்திக்கொண்டு? நான் பயந்தே போய்விட்டேன்.” - அவள் குரலில் அழுகை நடுங்கிற்று. *நான் எங்கிருந்தோ மீண்டேன். பெரு மூச்செறிந் தான். - "அப்பா, நான் பயந்து போய்விட்டேன், எனக்கு ஒன்றுமே புரியவில்லை. திடீரென்று அம்மா கத்தினாள்.' பயப்படாதே." பையனுடைய முதுகைத் தட்டினான். "ஹார்லிக்ஸ் கொஞ்சம் கரைத் துக் கொண்டு விரட்டுமா?’ அவள் முகத்தில் கவலை தோய்ந்திருந்தாலும் குழந்தை முகமாய்த்தான் இருந்தாள். - - 'ஏதாவது பேசுங்களேன். எனக்குப் பயமாக இருக் கிறது.” -- - - ------------- - - - - "பயப்படாதே." அவளது கனன்த்தின் மேல் கையை வைத்தான். சிந்தனையில் ஆழ்ந்த அவன் கண்கள் புன்னகை புரிந்தன. தாய் முகமும் மகன் முகமும் அணைந்தாற்போல் நெருங்கி அவன் முகத்தை எதிர் நோக்குகையில் ஒரு முகமாய்த்தான் இருக்கின்றன; கூட்டில் தாய்ப் பறவை இறங்கியதும் குஞ்சுகள் வாய் திறந்துகொண்டு கீச் கீச்சென வரவேற்பது போல். 'உங்களுக்கு என்ன ஆச்சு? என்ன பண்ணிற்று?” “எனக்கு ஒன்றும் ஆகவில்லை. ஒன்றும் பண்ணவில்லை. நான் ஓர் இடத்துக்குப் போய்விட்டு வந்தேன்.”

  • காங்கே?' "நாம் எல்லோரும் எங்கே போகிறோமோ, எங்கிருந்து வந்தோமோ அங்கே.” -

'எனக்கு ஒன்றும் புரியவில்லையடி யம்மா' திகைப்பில் அவள் விழிகள் மருண்டன. முகத்தில் பாதியை அடைத்துக் கொண்டு வண்டு போல் மை தீட்டிய கரிவிழிகள்; அஞ்சனாட்சி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதழ்கள்.pdf/58&oldid=1247156" இலிருந்து மீள்விக்கப்பட்டது