இதழ்கள்
59
இதழ்கள் 59
ஒன்றும் புரியாமல் இருப்பதுதான் அவள் அழகு. 'கண்ணா. உனக்கு நான் ஒரு கதை சொல்லப் போகிறேன்--” - . . 'கதை கதை' பையனுக்கு உவகை தாங்கவில்லை; கையைக் கொட்டிச் சிரித்தான். 'இப்போவெல்லாம் நீ கதையே சொல்கிறதில்லையப்பா. நேரங் கழித்துத் திரும்பி வருகிறாய். நீ வருவதற்குள் நான் துரங்கிப் போய்விடுகிறேன்.” 'கண்ணா, எத்தனை தடவை சொல்லிருக்கிறேன், அப்பாவை வாருங்கள், போங்கள் என்று சொல்லவேண்டு மென்று? ஹே' பையன் அலட்சியமாய்ச் சூள் கொட்டினான். "சரிதான் போ, அம்மா. அப்பாவும் நானும் என்றைக்கும் பழம், அப்படித்தானே அப்பா? "ஆமாம்” . "நிச்சயமாய்?” "ஆமாம்.” அவனுக்குத் திருப்தி ஏற்படவில்லை. "தி...ச்...ச்...ச்.ச்...ச்.சயமாய்?’’ "ஆமாம்.” 'உங்களை வா என்றாலும்போ என்றாலும்?” "ஆமாம்.” 'உன்னை வாருங்கள் என்று சொல்லாவிட்டாலும் போங். கள் என்று சொல்லா விட்டாலும்?" "ஆமாம்.” . “உங்களுக்கும் உனக்கும் என்ன வித்தியாசம்' 'ஒன்றுமில்லை.” "அப்போது நீங்களும் நீயும்-நீயும் நானும் ஒன்று தானே?” "ஆமாம்.” . 'எனக்கு அதுதான் வேனும்.” பையன் அவசரமாய் எழுந்து நின்றான். டென ஆடிற்று. அப்பாவை இறுக அனைத்