உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இதழ்கள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதழ்கள்

63

இதழ்கள் §3.

"அப்பா! அப்பா!-' மகன் குரல் கேட்டதும் தாமே உருவாகிக் கொண்டிருந்த விளக்கங்களும் அவற்றிற்கு முந்திய விரக்தியும் வெள்ளத் துடன் கரைந்து போயின. பூந்தொட்டிகளுக்கு அருகில் குப்புற வீழ்ந்து அழும் அவளைக் கண்ணெடுத்துப் பார்க்கவில்லை. குழந்தையின் குரல் வரும் திக்கு நோக்கிச் சென்றான். 'என்ன அப்பா இது? எனக்குக் கோபமாக வருகிறது. கூப்பிட்டால் ஏன் என்றுகூடக் கேட்க மாட்டேன் என்கிறாயே!” 'நான் எங்கு இருக்கிறேன்?" அவன் தன் கண்களைத் தேய்த்துக்கொண்டான்: ஊஞ்சலில், குழந்தையுடன், அவளுடன். "அப்பா, உனக்கு உடம்பு சரியில்லையா?” ' உடம்பு சரியாய்த்தான் இருக்கிறது. ஆனால் போய்ப் போய்த் திரும்பி வந்துகொண்டிருக்கிறேன்.' 'என்ன, ஊஞ்சலாடுகிற மாதிரியா? "ஆமாம்! சரியாய்ச் சொன்னாய். கண்ணா, இன்றைக்கு உனக்கு ஒரு கதை சொல்லப்போகிறேன்.” 'சரிதான், கதை சொல்கிறேனென்று சொன்னதும் திடீர் திடீரென்று நீ துரங்கிப் போய்விடுகிறாய்!” இல்லை; இன்றைக்கு நிச்சயமாய்ச் சொல்லப் போகி றேன்.” 'உடம்பு சரியில்லாவிட்டால் சொல்ல வேண்டாம். அப்பா. அப்புறமாய்ச் சொல்லு.” 'இந்தக் கதையை இப்போது சொல்லாவிட்டால் அப்புறம் சொல்ல வராது. அப்படியே சொன்னாலும் இப்போது மாதிரி அப்போது வராது. கண்ணா, உனக்கு இந்தக் கதையை இப்போதே சொல்லிவிடுகிறேனே.” 'என்ன அப்பா கொஞ்சுகிறாய்?" அவன் கண்கள் மருட்சியுடன் அவனை நோக்கின. கண்ணா, கண்ணா, இன்றைக்கு இந்தக் கதையைச் சொல்லி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதழ்கள்.pdf/63&oldid=1247161" இலிருந்து மீள்விக்கப்பட்டது