பக்கம்:இதழ்கள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

இதழ்கள்

6 湾 இதழ்கள் விடுகிறேன்; ஓர் அகமுடையான் பெண்டாட்டி இருந் தார்கள்-’ 'ஒரே ஒர் ஊரிலே-” "எல்லாம் இந்த ஊரிலேதான் இருந்தார்கள். அவர்கள் ஒருவர்மேல் ஒருவர் மிகவும் ஆசையாய் இருந்தார்கள். அவனுக்கு வேறே மனுஷர்கள் இல்லை. அப்பா, அம்மா, தம்பி, தங்கை...” 'அப்போது மிகவும் தனியாக இருக்குமே!’ *ஆனால் அப்போது தெரியவில்லை. கல்யாணமான புதுசு, அவர்களுடைய பிரியங்களைப் பங்கிட்டுக்கொள்ள வேறே உறவு மனிதர்கள் இல்லை. அதனால் அவர்கள் ஒருவர் மேல் ஒருவர் வைத்திருந்த ஆசை, அன்பு, பிரியம், நினைப்பு, எல்லாவற்றிலும் முழுமை இருந்தது. அவனால் ஒரு நிமிஷங் கூட அவளை விட்டுப் பிரிந்திருக்க முடியவில்லை. திடீர் திடீரென்று நினைத்துக்கொண்டு ஆபீசில் பாதி வேலையில் எழுந்திருந்து வீட்டுக்கு வந்துவிடுவான்.” 'அது மாதிரி ஒரு பிரியங்கூட இருக்குமா அப்பா?” 'இருந்தது பாரேன் கல்யாணமான புதிசு. நீ இப் போது கேட்ட மாதிரியே அவனுக்கே இந்தச் சந்தேகம் வந்தது. இது மாதிரி ஒரு பிரியம் உண்டா? உலகத்தில் எத்தனையோ அகமுடையான் பெண்டாட்டி இல்லையா? அது மாதிரி நாம் ஏன் இல்லை? இவ்வளவு ஆசை இருக்க லிாமா? யார் என்ன கேலி பண்ணினாலும் வெட்கம் கெட்ட ஒர் ஆசை...' "அப்பா, எனக்கு இந்தக் கதை பிடிக்கவில்லை.” 'இல்லை. இல்லை.'அவன் அவசரமாய்க் கெஞ்சினான். 'இந்தக் கதைக்கு இது முக்கியம்-” 'எனக்கு ராஜா ராணி கதை சொல்லு. அகமுடையான் பெண்டாட்டி கதை வேண்டாம்.' 'சரி, அவனே ராஜா, அவளே ராணி என்று வைத்துக் கொள்ளேன். அந்த ராஜாவும் ராணியும் ஒருவர்மேல் ஒருவர் அவ்வளவு பிரியமாக இருந்தனர். அப்போது அவர் கிளுக்கு ஒரு குழந்தை பிறந்தது.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதழ்கள்.pdf/64&oldid=1247162" இலிருந்து மீள்விக்கப்பட்டது