உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இதழ்கள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதழ்கள்

65

இதழ்கள் 6

5 'ஆ ராஜகுமாரன் வந்துவிட்டான்!” பையன் களிப் புடன் கை கொட்டினான். அப்பா, ராஜகுமாரன் பிறப் பதற்கு ராஜாவும் ராணியும் மிகவும் தவங் கிடப்பார் களாமே; அப்படித்தானே அப்பா கதையிலே எல்லாம் வருகிறது?’ "இந்தக் கதையில் இதுதான் வித்தியாசம். குழந்தை பிறக்கவில்லையே என்று அவர்கள் தவம் கிடக்கவில்லை. அவர்களுக்குத்தான் மற்றதைப்பற்றி நினைப்பு இல்லையே! குழந்தையைப் பற்றி எங்கே நினைக்கப் போகிறார்கள்?” 'அப்போது தவங் கிடக்காமலேயா ராஜகுமாரன் வந்தான்? அப்போது சுவாமி மிகவும் நல்லவர், அப்பா' 'கண்ணா, கடவுள் கேட்டுத்தான் கொடுப்பார் என்று நினைக்கிறாயா? கேட்காமலும் கொடுப்பார். கேட்டதைக் கொடுப்பார் என்றும் சொல்ல முடியாது. கேட்காததையும் கொடுப்பார்.” உதட்டோர்ங்கள் புளிப்பில் வளைந்தன. 'அவர் ஏன் அப்படி இருக்கிறார்?" 'எனக்குந்தான் புரியவில்லை.” 'ஏன் அப்பா உனக்குப் புரியவில்லை?” 'நான் என்ன கொக்கா? எல்லோருக்குந்தான் புரிய வில்லை.” 'எனக்குப் புரிந்து போச்சு.” அவன் ஒரு கணம் திகைத்துப்போனான். பையனை அச்சத்துடன் நோக்கினான். அவர் செய்வது எல்லாமே எல்லாருக்கும் புரிந்துவிட்டால் அப்புறம் அவர் கடவுளாய் இருக்க முடியுமா?’ அவன் தொண்டையில் மூச்சு சற்றுத் தடைப்பட்டுத் திணறிற்று. மகனை அப்படியே அனைத்துக் கொண்டான். மகனின் மார்பு அவன் மேல் படபடத்தது. அவன் கண்கள் மூடின. முற்றத்திலிருந்து குளிர்ந்த காற்று கண்ணிமைகளை ஒற்றியது. விளக்கில் சுடர் பொரிந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதழ்கள்.pdf/65&oldid=1247163" இலிருந்து மீள்விக்கப்பட்டது