உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இதழ்கள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

இதழ்கள்

Éé இதழ்கள் “என்ன கப்சிப்! அத்தோடு கதை அவ்வளவுதானா?? பையன் அணைப்பிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டான். "குழந்தை பிறக்கப் போகிறது என்று தெரிந்தது. தெரிந்ததும் அந்தப் பெண்ணின் பெற்றோர்கள் அவனைத் தங்கள் வீட்டுக்கு அழைத்துக்கொண்டு போய்விட்டார்கள்.” 'ஏன் அப்பா?” “அது அப்படித்தான் வழக்கம்.” 'அவன் கண்கள் அவள் கண்களைச் சந்தித்தன. அவன் விழிகள் முழுக் கறுப்பல்ல; கருநீலம். அவள் விழிகள் கரு வண்டின் நிறம், மை தீட்டி, முகத்தில் பாதியை அடைத்தாற் போன்ற பெரிய கருவிழிகள். 'அவளைத் தாய்வீட்டுக்குப் போகவிடவே மனம் இல்லை. அவள் ஊருக்குப் போவதற்கு முதல்நாள் இரவுகூடச் சினிமா வுக்கு மூன்றாவது காட்சிக்குப் போய்வந்தனர்; அவள் தாய் புத்தி சொல்லிப் பார்த்தாள்; என்னவோடியம்மா சொல்லி விட்டேன். எங்கள் நாளிலே உண்டாகி யிருக்கிறவர்கள் விளக்கு வைத்தாலே அப்புறம் வெளிக்கிளம்ப மாட்டார்கள். அதற்கு அப்புறமே காற்று நல்லதில்லை. ஏதேதோ நட மாடும்' என்றாள். 'அம்மா, அவர் நீ சொன்னாலும் கேட்கமாட்டார். நான் சொன்னாலும் கேட்கப் போவதில்லை. எனக்கோ சினிமாப் பிடிக்கும் என்று உனக்குத் தெரியும். நீ இதோ இன்றைக்குக் காலை வந்தாய்; நாளைக்காலை போகப் போகிறாய். உனக்கு ஏன் பொல்லாப்பு? நானுந்தான் இதற்கு அப்புறம் எந்தச் சினிமாவைப் பார்க்கப் போகி றேன்' என்றாள். "படம் முடிந்தது. டாக்ளிகளின் குழல்களும், ரிக்ஷாக் களின் மணிகளும் காதைப் பொளிந்தன. கூட்டம் கலைந்தது. 'வீட்டுக்கு நடந்தேபோகலாம். அவன் குரல் கெஞ்சிற்று. அதுவரைக்கும் பேசிக்கொண்டிருக்கலாம் அல்லவா? “அவள் புன்னகை புரிந்தாள்; உங்களைப் பார்த்தால் எனக்கு ஒரு பக்கம் சிரிப்பு வருகிறது. ஒரு பக்கம் பாவமாக இருக்கிறது. அது என்ன சபலமோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதழ்கள்.pdf/66&oldid=1247164" இலிருந்து மீள்விக்கப்பட்டது