பக்கம்:இதழ்கள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதழ்கள்

67

இதழ்கள் 67 'அவன் முகம் விழுந்தது. அதைக் கண்டதும் அவளுக்குச் சுருக்கென்றது. அவசரமாய், ஆனால் எனக்குப் பயமாயும் இருக்கிறது. நீங்கள் என்மேல் வைத்திருக்கும் ஆசைக்கு நான் தகுதியோ? என்றாள்.

'இருதயம் நிஜமாக நிறைந்திருந்தால் அதன் பாஷையை அதுவே அமைத்துக் கொள்கிறது. - "தெருக்களில் நடமாட்டம் இல்லை. அவன் முழங்கை வளைவில் தன் கையைக் கோத்துக் கொண்டாள். அவளாலுத் தான் அவனைத் தொடாமல் இருக்க முடியவில்லை. யார் என்ன வேனுமானாலும் நினைத்துக் கொள்ளட்டும். "தெருவிளக்கின் வெளிச்சத்தில் அவள் முகம் பனிவெளுப் பில் மிகவும் களையாக இருந்தது. அவள் கன்னத்தில் உராயும் கூந்தலிலிருந்து கதிர்ப் பச்சையின் நெடி கம்மென்று அலைந்தது. அவள் உடலில் தனியாக ஒரு வெற்றி யொளி. வயிறு அசிங்கமாய் வெளித் தெரியாமல் அடக்கமாய்த்தான் இருந்தது. அந்த உடல் வாகே அப்படி. 'தன் கன்னத்தை அவன் தோள்மேல் தேய்த்துக் கொண்டே, எனக்குத் தாகமாய் இருக்கிறதே என்றாள். "அதுதான் வீடு கிட்டே வந்துவிட்டதே!’, 'பொய்க்கோபத்தில் உதட்டைப் பிதுக்கினாள், உங் களுக்கு ஜாடைமாடை தெரியாது. எனக்கு ஐஸ் போட்ட கலர் வாங்கித் தாருங்களேன்.” 'அப்பொழுதுதான் அவனும் பார்த்தான்-ஒரு நிமிஷ துரத்தில், சோடாக்கடையில் பெட்ரொமாக்ஸ் விளக்கை. நாங்கள்தாம்-ஆண்கள்-கண்ட இடத்தில் சாப்பிட வேண்டி யிருக்கிறது. உனக்குக்கூட அந்த அசுசி எதற்கு என்று பார்த்தேன்’ என்றான். அப்படியானால் எனக்கு வாங்கிக் கொடுக்க உங்களுக்கு மனமில்லை என்றுதான் அர்த்தம்.' சேசே! அது மாதிரி சொன்னாலே எனக்கு வேதனையாக இருக்கிறது.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதழ்கள்.pdf/67&oldid=1247165" இலிருந்து மீள்விக்கப்பட்டது