பக்கம்:இதழ்கள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதழ்கள்

69

இதழ்கள் #9

இரட்டைத் தம்புராச் சுருதிபோல், சொல்லும் கதை யுடன் கூடவே நினைவு மீட்டும் இந்நேரங்களைக் கண்ண னுக்குத் தெரிவிப்பது எப்படி? 'அவளைப் பிள்ளைப் பேற்றுக்கு அவள் தாயார் அழைத்துக் கொண்டு போய்விட்டாள்.-சுலபமாய் நாலு சொற்கள். அந்த நாலு மாதங்களில் அவளை நினைத்து நைந்து உளுத்து ஒடாய்ப் போனதை அவை சொல்லுமோ? எண்ணி எண்ணி, எண்ணியது என்னவென்று தெரி யாது எண்ணங்கள் குழம்பி, மண்டையை இரு கைகளாலும் கெட்டியாய்ப் பிடித்துக்கொண்டு, ஒரே இடத்தை வெறித்துப் பார்த்துக்கொண்டு மணிக்கணத்கில் உட்கார்ந்திருப்பான். அம்மாதிரி நேரங்கள் வருவதை முன்கூட்டியே அறிகையில் திகிலாக இருக்கும். கறுத்த மேகங்களாய் அவன்ை அவை கவ்வும். ஹோட்டலில் சாதம் ஆறி விறைத்து இறக்கை விசித்துக் கொள்ளும். இலையோரத்தில் கிண்ணத்தில் வைத்து விட்ட மோரில் ஈ விழுந்து தவித்துக் கொண்டிருக்கும்.

  • லார், ஸார்!-நேரமாச்சு சார்-' "سسسسسهيس?فسه؟ 'கையை வைக்காமலே எழுந்து போய்விடுவான்.” 'வீட்டுக்குப் போகவே அஞ்சல்-வீடு காடு.

அறைக்கு அறை வாசற்படியில் தயங்கி நிற்பான், அவள் விட்டுச் சென்ற அடையாளங்களை, கண்ணோட்டத் தில் தேடிக் கொண்டு; வெந்நீருள்ளில் அவள் விட்டுச் சென்ற சோப்புக் கட்டித் தேசலை வெகு நாள் வைத்துக்கொண் டிருந்தான். ஆனால் அம்மாதிரி, படுக்கையிலும் தலையணையிலும் அவள் உடலும் தலையும் அழுந்திய அமுங்கலை எவ்வளவு காப்பாற்ற முடியும்? 'நினைத்துக்கொண்டு. லீவு போட்டுவிட்டு வண்டியேறி அவளைக் கண்டு திரும்பும் துரத்தில் அவள் பெற்றோர்களின் ஊர் இல்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதழ்கள்.pdf/69&oldid=1247167" இலிருந்து மீள்விக்கப்பட்டது