பக்கம்:இதழ்கள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதழ்கள்

71

இதழ்கள் 7;

இழைந்து அடங்கியிருக்கின்றன! அவன் கண்கள் கோடிக்குக் கோடி தேடி அலைந்தன. ஐயோ, இங்கே இன்னும் இரண்டு நிமிஷங்கள் தானே நிற்கும்? வருகிறேன் என்றுவிட்டு வர வில்லையா? வண்டி தப்பிவிட்டதோ? கடைசி நேரத்தில் என்ன அசந்தர்ப்பமோ உடம்புக்கு என்னவோ, ஏதோ? என்னால் இனிமேல் இந்த அவஸ்தையைத் தாங்க முடியாது. முடியுமோ? மின்னினும் வேகமாய், அதற்குள் அடுக்கடுக்காய், தனித் தனியாய் எத்தனை எண்ணங்கள். அதனதன் தனித் தனிப் பயங்கரங்களுடன்: 'அவற்றில் அவன் மூழ்கி, அவன், தலைமேல் அவை மூடி. விடும் நேரத்தில் கடைசி வண்டிக்கு முன் வண்டியிலிருந்து அவன் மாமியார் இறங்குவதைக் கண்டான். அவள் கையில் தலையணை மாதிரி ஏதோநீளமாய் ஏந்திக் கொண்டிருந்தாள். குழந்தையின் தலைமயிரின் கறுப்பு மாத்திரம் அதிலிருந்து எட்டிப் பார்த்தது. பின்னாலேயே அவள் இறங்கினாள். கைய கலத்திற்குப் பெரிது பெரிதாய் நீலப்பூக்கள் அச்சடித்த வெள்ளைப் புடைவை. வெட்கமும் சந்தோஷமும் குழம்பும் கண்கள்.” 'அஞ்சனா-அஞ்சனாட்சி. முகத்தில் பாதியை அடைத் தாற் போன்ற பெருவிழிகள். அவள்தான். ஆனால் ஏதோ ஒரு தினுசில் மாறிப் போயிருந்தாள்.' எங்கே? எப்படி? பிடிபடவில்லை. உடலில் தனியாய்த் தெரியும் குழைவிலும் தளதளப்பிலுமா? பிள்ளை பெற்ற வளுக்குத் தனியாய்ச் சேர்க்கும் செளக்கியத்தின் விளைவினால் இருக்கும்; ஆனால் அது இல்லை. இது அஞ்சனாதான். ஆனால் அன்று சினிமாவிலிருந்து திரும்பி வரும் வழியில் சோடாவைக் கண்ணாடித் தம்ளரில் சீப்பிக் குடித்த அவள் அல்ல. இந்த நரக வேதனையைச் சகித்துக்கொண்டு யாருக் காகக் காத்துக் கொண்டிருந்தானோ அவள் அல்ல. கண்ணெதி ரில் சீட்டை மாற்றிவிட்டாற் போல் புரியாத ஏமாற்றம் நெஞ் சடியில் நச்சரித்தது. ஏற்கெனவே தன்னை அவளுக்கு இழந்த தல்லாமல் இந்தப் பிள்ளைப்பேற்றின் மூலம் அவளிலும் ஒரு பகுதியை இழந்துவிட்டாற் போலிருந்தது. ஆனால் அது எது?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதழ்கள்.pdf/71&oldid=1247169" இலிருந்து மீள்விக்கப்பட்டது