உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இதழ்கள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதழ்கள்

73

இதழ்கள் 宠3

முடிகிறது? என் வீட்டில் எனக்கு மலையாய்க் காத்துக்கிடக் கிறது. இங்கு வந்து நான் உட்கார்ந்திருக்க வேண்டுமா? 'தன் கண் மறைவில் அவள் பெண்ணை விட்டு வைக்கவில்லை. திடீரெனக் கொல்லை ரேழியிலிருந்தோ, சமையலறையிலிருந்தோ, மாடி வளைவிலிருந்தோ தோன்று வாள். அவனுக்கு ஒரொரு சமயம் சிரிப்பு வந்தது. அவன் பாட்டி நினைவு வந்தது. அவள் கூடத்தில் படுத்துக்கொள்ளு முன் எல்லோருக்கும் கடைசியில் உரக்கக் கூவுவாள் 'பரதர் பக்கத்திலே காவல் அனுமார் அண்டையிலே காவல், ஐயனார் ஆனைமேல் காவல், கறுப்பண்ணா குதிரைமேல் தாவல், பாம்புகளவி, பூச்சிகளா, பேய்களா, பிசாசுகளா, துரத்துரத் துரத்துாரத் துளசத்துாரத்-’ "அது மாதிரி, இந்த மாமியார் காவல். எதுக்குக் காவல்? "ஒரு நாள், குழந்தைக்குக் குளியானதும் கூடத்தில் தொட்டிலில் வளர்த்துவிட்டு அதற்கு அரைத் துரக்கத்தில் கண்கள் செருகுவதைத் தலையைச் சாய்த்துப் பார்த்துக் கொண்டு தொட்டிலடியில் உட்கார்ந்திருந்தாள். ஏற் கெனவே பாப்பா நல்ல சிவப்பு. எண்ணெய்க் குளிக்கும் அதற்கும் அதன் முகம் முழுத்தக்காளிப் பழம்போல் இருந்தது. 'மெளனமான ஒர் அழைப்பு அவள் நெஞ்சைத் தட்டியது. 'திரும்பினாள். கூடத்து அறை வாசற்படியில் அவன் நின்று கொண்டிருந்தான். புருவங்கள் நெரிந்து, முகம் சுண்டிப் போயிருந்தது. ஏதோ அடிவயிற்றிலிருந்து எழும்பித் தொண்டையை அடைத்தது. சுற்றுமுற்றும் பார்த்தாள். எழுந்து, அவன் விரிந்த கைகளின் அணைப்புள் சென்றாள். அவன் அப்படியே அவளை அறைக்குள் இழுத்துக்கொண் டான். ஒரு மாபெரும் குடலையிலிருந்து பூக்கள் சரிந்து அவன் மேல் விழுந்தன. அவற்றின் மிருதுவில் அவன் புதைந்து இ-5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதழ்கள்.pdf/73&oldid=1247171" இலிருந்து மீள்விக்கப்பட்டது