பக்கம்:இதழ்கள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதழ்கள்

77

இதழ்கள் 77

“கூடத்தின் மூன்று பக்கங்களிலும் அடுக்கடுக்காய் மாட்டியிருக்கும் படங்களிலிருந்து வெவ்வேறு கடவுள்கள் அவளை எதிர்நோக்கின. அவையுந்தான் எதையோ தேடிக் கொண்டிருந்தன. அவளையா? 'காங்கை யடைந்த அவள் கண்கள் திகைத்தன. தேடியது அகப்படவில்லை. கல்லைக் கட்டிய கால்களை இழுத்துக்கொண்டு அறைக்குள் சென்றாள். 'கூடம் மறுபடியும் வெறிச்சென ஆயிற்று. ‘தெய்வமே, எல்லா நியாயமும் தெரிந்த உனக்குக் கண்ணில்லாமல் போய்விட்டதா?’ நியாயத்துக்குக் கண் கிடையாது. அதுதான் அதன் நியாயம்.

  • உனக்குக் கண்ணில்லாததால் என் குழந்தைக்கும் கண்னை அவித்துவிட்டாயா?

குழந்தைகள் தெய்வத்திற்குச் சமானம். தெய்வமே தெய்வமே தெய்வமே! நீ இருக்கிறாயா? "நான் இல்லாத இடத்தைச் சொல்லு.” *" குழந்தையின் இரு பக்கங்களிலும் இருவரும் நின்றனர். அதற்குக் கண்ணையும் கட்டி, கழுத்துவரை சிவப்புக் கம்பளியையும் போர்த்தி மூக்கில் ரப்பர்க் குழாய் வழியாகப் பிராணவாயுவை நர்ஸ் செலுத்திக்கொண்டிருந் தாள. - 'கொர்-கொர்-கொர்-மூச்சு முஇடிற்று. 'அவள் கண்கள் குழந்தையையே இறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தன. அவன் அவளைப் பு:இத்த்துக் கொண்டிருந் தான். விஷயம் அழுகை, கோபம், துயரம், பாசம் எல்லா வற்றையும் கடந்துவிட்டது. இருவர் நெஞ்சிலும் ஒரே எண்ணந்தான் ஒடிற்று.” 'கண்ணா! என் கண்ணே, நீ போய்ண்டு. எங்கள் பாவத்தை நீ அநுபவிப்பது போதும். இப்படி இருக்கிறதை விட இப்போதே போய்விடுவதுதான் நல்லது. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதழ்கள்.pdf/77&oldid=1247175" இலிருந்து மீள்விக்கப்பட்டது