78
இதழ்கள்
78 இதழ்கள் ஆனால் அவர்கள் பிரார்த்தனைப்படி அது நிறைவேறுவ தாக இல்லை. “அந்தப் பூ உடலில்தான் சாவையே எதிர்த்துப் போராடித் தன்னிடமிருந்து உதறித்தள்ளும் அவ்வளவு உரம் எப்படி ஒளிந்துகொண்டிருந்தது. பெரியவர்களுக்கு அவ்வளவு சக்தி உண்டோ? அது மூச்சுக்குத் திணறும் ஒவ்வொரு முக்கலும், உடல் புரளலும், கைகால்களின் உதைகளும் மல்லனின் முயற்சிகளாய் இருந்தன. இந்தப் போராட்டத்தில் வைத்தியர்களையே வியக்க அடிக்கும் ஒரு மகத்துவம் இருந்தது. ஆத்மீகம் பொலிந்தது. உயிர்க் கொள்கையின் உருவம், காரணமான உருக்கொண்டாற் போலிருந்தது.
- பிறகு ஒரு நாள்.
'அவள் மடியில்தான் குழந்தை கட்டுக் கட்டிய கண் களுடன் துரங்கிக் கொண்டிருந்தது. அவன் பின்னால் கை கோத்துக்கொண்டு அவள் அருகே நின்று கொண்டிருந்தான். ஆயுளுக்கும் ஒருவருக்கொருவரும் அவரவர்க்கும் விடுதலை யின்றி விதிக்கப்பட்டவர்களாய்த் தப்ப வழியின்றி ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு...இன்னும் இது மாதிரி எத்தனை காலம்? "அப்பொழுது பாப்பா கல்லென்று சிரித்தது. முன்பின் அறிகுறியின்றித் தி கல்லென்று ஜலத்தில் கல்லை எறிந்தாற்போல் வாய் விட்டுக் சிரித்தது. * “அவனுக்கு ஒரு மூச்சுத் தப்பிற்று. ஆண்டவன் திடீ ரென்று இழைக்கும் ஆச்சரியத்தில் அச்சம், வியப்பு, பரவசத் தில் தன்னை இழந்துவிட்டவனாய் அவன் உடல் கிடுகிடென ஆடிற்று. குழந்தையை வெறித்த கண்களுடன் மெதுவாய்ச் சறுக்கிக் கீழே உட்கார்ந்தான். 'பாப்பா எதைக் கண்டு சிரித்ததோ? ஆண்டவன் எந்தத் தாமரையை அதன் கனவில் காண்பித்தானோ?