இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
8
பூவின் மலர்ச்சியில், அதனின்று கமழும் மணத்தில் நமக்கும் பங்கு உண்டு. இதழ் மேல் தங்கி வண்டுகள் பருகும் தேன் நம் மேலும் சிந்துகிறது. நாம் பாக்யவான்கள். நம்முடைய இந்தப் பரஸ்பரத் தன்மையை இக்கதைகள் வெளியிடின் இவை வீணாகவில்லை.
இவைகளை ஒன்றாய்த் தொடுத்துத் தந்திருக்கும் பதிப்பகத்தாருக்கும், இவைகளைத் திரட்டுவதில் சிரத்தையெடுத்துக்கொண்ட மற்ற என் நண்பர்களுக்கும் நான் கடமைப் பட்டுள்ளேன். இது ஒருவரே ஏற்றுச் செய்துமுடித்து மார் தட்டிக்கொள்ளும் காரியமல்ல. இரு இதழ் பூவாகிவிட முடியாது. நாம் எல்லோரும் இதழ்களே.
லா. ச. ராமாமிருதம்