உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இதழ்கள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதழ்கள்

83

இதழ்கள் 83

செங்காலி, கரு வெச்சா தீத்துடனுமாம். இண்ணைக் கில்லாட்டி எண்ணைக்காவது.” 'எண்ணைக்காவதுன்னா எண்ணைக்கு? “அது மாதமோ, வருஸ்மோ, செத்துப்பூடறத்துக் குள்ளே எண்ணைக்கோ தீத்துக்கணும்; இல்லாட்டி ஆவி வேவாதாம்-' "அப்படி என்ன செய்தான் உன்னை?” "யாரு?" 'அந்த டைவர்தான்.” "ஓ அதுவா? அண்ணைக்குப் பாலத்து இறக்கத்திலே மோட்டார்காரை நிறுத்திவெச்சுட்டு டிகடைக்குப் போயிருந் தாம்பா. நான் செங்காலியோட வெள்ளாடிட்டிருந்தேன். டேய், அந்த மோட்டார்காரைப் பாத்தியான்னான்." அப்பா நீ இந்தக் காரை பாத்தில்லியே?” “எத்தனையோ மோட்டாக்காரு ஒண்ணா தெண்டா?” ‘'நீ இந்தக் காரைக் பாத்தில்லே. நாளைக் காலிலே காட்றேன் பாரு. நீளமா சுமா வயவயன்னு-ஆ! அண்ணைக்கு செங்காலி அப்பனும் நீயுமா, கட்ட மரத்துப் பின்னாலியே போட்'டாட்டமா ஒட்டியாந்தீங்களே ஒரு ராச்சஸ் மீனு, அது மாரிதி...சுமா வயவயன்னு மூஞ்சிலே நெண்டு லைட்டு முழியாட்டம் முழிக்கிது. நான் அதன் ஒடம்பெ தொட்டுப் பாத்துட்டேருந்தேன். ஆசையா இருந்துச்சிப்பா! அப்போ புட்டத்துலே பட்டுனு ஒரு உதை விளுந்துச்சுப்பா. கீளே வியந்துடற மாதிரி கால் அப்படியே மடிஞ்சு போச்சு. 'யம்மாடி’ன்னு கத்திட்டு திரும்பிப் பார்த்தேன்; யமனாட்டம் நிக்கிறான்!”

யாரு?

டைவர்தான், அப்படியே நாக்கை கெட்டியா கடிச் சுட்டு கரு வெச்சுட்டேன். அப்பா நான் சொல்றேன் பாரு, ஒரு நாள் அவன் கொத்து மீசைலே வத்தி வெச்சுடப் போறன்.”

    • {;rتوي ، ،
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதழ்கள்.pdf/83&oldid=1247181" இலிருந்து மீள்விக்கப்பட்டது