இதழ்கள்
87
இதழ்கள் 惑7
துணி போட்டுப் படுத்திருக்குது. இங்கே நீ இப்படி படுத்திருக் கிறே. அம்மா, எனக்குப் பசிக்குதே!’ பசிக்குதுன்னா எடுத்து வெச்சுட்டுத் துண்ணு.” "அப்பன் வரமாட்டேன்னுதேம்மா!' 'வராட்டிப் போவட்டும். வாவான்னு எங்கே எவங்க அளச்சுக் கொட்டறாங்களோ அங்கே போவட்டும்.” "ஏம்மா அப்பனை அப்படிப் பேசறே? இது தம்ம வீடு தானே? இங்கெல்லாமே எங்கே அது போவும்?” 'உன் அப்பனை நீயே கொண்டாடிக்க. இந்தப் பங்களா வுலே நீங்க ரெண்டு பேருமா சொவம்மா இருங்க.” -நி? . 'என்னைப் பத்தி ஒனக்கென்ன? உன் அப்பனுக்கென்ன? இனிமேல் எனக்கேதான் என்ன?” ஜலத் தகட்டின்மேல் சிற்றலைகள் நடுங்குவது போல், குரலின் தொனிகள் நடுங்கின. அவன் அவள் தோளைப் பிடித்துக் குலுக்கினான். அவள் விழிகள் சுழன்றன, "ஏம்மா அப்படிப் பேசறே? எனக்குத் திகிலாயிருக்குதே' அவன் ஒரு சமயம் அலைகளில் விளையாடிக் கொண்டிருந் தான். நாய்க்குட்டிகள் கீழே புரண்டு ஒன்றை யொன்று கடித்து விளையாடுவதுபோல். அலைகள் அவன்மேல் மோதி அவனைக் கீழே தள்ளி, காலடியில் மண்ணைப் பறித்து அவனோடு விளையாடின. அப்போது ஒரு பெரிய அலை திரண்டு, சிகரத்தில் துரை கக்கிக் கொண்டே வந்து, நேரே அவன்மேல் உடைந்து பின்வாங்குகையில், அவனைக் கரையி லிருந்து அடியோடு பெயர்த்துத் தன்னோடு கிர்ரென்று இழுத்துச் சென்றது. அந்தரத்தில் பந்துபோல் மேலும் கீழும் சுற்றிலும் தண்ணி 'அம்மா'ன்னு அலறித் திறந்த வாயுள் 'தண்ணி புகுந்தது. கண், காது, மூக்கு எங்கும் தண்ணி. நான் உசிரோடே இருக்கேனா செத்துப்பூட்டேனா? இரண் டுமே தெரியவில்லை. ஆனால், பூமிலே காலோ கையோ பணும். அவஸ்வமா படனும், அது ஒன்றுதான்