இதழ்கள்
91
இதழ்கள் 9i
வேலையை, அந்த வேளைக்குள் நிறைவேற்றுவதற்கு விரைந்து கொண்டிருந்தது. - இரவின் தனிமையிலே தான் ஒரு தன்னந்தனியாய் எதிலுமே ஒட்ட முடியாமல் அது தனித்து ஓடுவதைப் பார்க் கையில், சகிக்க முடியாத, சொல்ல முடியாத ஒரு கிலேசம், ஒரு பரிவு, அவள் நெஞ்சை அழுத்திற்று. அது ஒடி மறைந்த பின்னர் அந்த இடத்தில், அதன் தோற்றத்தின் விறுவிறுப்பு அவள் நெஞ்சில் வெகு நேரம் தங்கியிருந்தது. அவள் பிள்ளை ஒடுகையில் அவளுக்கு அந்த நினைவுதான் வந்தது. அவள் கூவிக் கொண்டே அவன் பின்னால் வருவது அவன் செவியில் விழவில்லை, அவன் ஒட, அவள் ஒடக் குப்பத்தை விட்டு வெளிப்பட்டு ரோடை அடைந்து விட்டனர். - டேய்!” ரோடின் குறுக்கே விழுந்து அடித்து ஓடினான். அப்பொழுதுதான் அவள் அதைக் கண்டாள். ‘பூம்-பூம்!! பாம்!!! பாம்!!!’ இருளில் பிரம்மாண்டமான விழிகள் இரண்டு, மின்னலின் வேகத்தில் நீந்திக் கொண்டு அவனை எதிர் நோக்கி வந்தன. ராட்சஸ் மீன் மாதிரி. அன்று அவள் புருஷனும் செங்காலியின் அப்பனும் கட்டை மரத்தின் பின்னால் கட்டிக் கொண்டு வந்து சேர்த்தார்களே ஒரு ராட்சஸ் மீன், அது மாதிரி வழவழ வென வெள்ளி முலாம் பூசிய நீண்ட லாகவமான உடல். அவள் அலறினாள். 'ஏய்யா-ஸஅவர்!’ ட்ரைவர் சபித்தான். ப்ரேக்குகள் க்lச்சிட்டன. - 'ஐயையோ! என் மவனே!; கார் முகத்தில் நீட்டிக் கொண்டிருந்த இரு சட்டங்கள் அவள் பையனைச் செண்டுபோல், ப்ளாட்பாரத்தின் மேல் அவள் புருஷன் காலடியில் தூக்கி எறிந்தன. நாலா பக்கங்களிலிருந்தும் ஈசல் கூட்டங்கள் போல் கும்பல் எப்படியோ நொடியில் கூடிக் காரை மொய்த்துக் கொண்டது.