இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
இதழ்கள்
93
இதழ்கள் 93
அவனைச் சுற்றிக் கண்ணுக் கெட்டியவரை. பல வர்ண, பலஜாதி மீன்கள் மந்தை மந்தையாய் ஆழத்திலிருந்து வெளிப் பட்டு மிதந்து கொண்டிருந்தன. திடீரென்று கட்டு மரத்தி லிருந்து கடலில் குதித்து அவைகளுடன் தானும் ஒன்றாய் நீந்திக் கொண்டிருந்தான். அவைகளின் கணித்த கண்கள் அவனைப் பட்சத்துடன் நோக்கின. மரத்தின் கினையைக் குலுக்கினால் போல் அவன் மேல் பூக்களும் பூவின் இதழ்களும் மழை சொரிந்தன. அவன் உடலிலிருந்து புதிதாய்ப் பூத்துவிட்ட பூவின் மணம் கம்'மென எழுந்தது. அவன் தகப்பனின் கைகளினிடையில் அவன் கசங்கிய பூவாய்க் கிடந்தான்.