உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இதழ்கள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

இதழ்கள்

* 寮 5. இதழ்கள் '-உம் ஊம்-பாகீ, டைம் ஆச்சு!” "இதோ வந்துட்டேன்' 'பாகீ, ஜட்கா வண்டி வாசல்லே வந்து நிக்கறது. பட்ட ணத்து ஜட்கா வண்டிக்காரனோடேயும் உன் தாயாரோடும் எவனும் சண்டை போட்டு மீள முடியாது.” "எங்கம்மா பேச்சை இழுக்காமே உங்களால் முடியாதா?” "அப்படி ஆயிடுத்தே என்ன பண்ணுகிறது?” "இந்த சமயம் நீங்கள் அவளை மன்னிச்சுடலாம்.' 'ஊம் ஊம் டைம் ஆச்சு-மேல் வேலையைப் பார்.” 'இதோ வந்துட்டேன்.” 'பாகீ, குத்து விளக்குக்கு நமஸ்காரம் பண்ணினையா?” "அப்பவே பண்ணிட்டேன் அம்மா. இன்னொரு தடவை பண்றேன்.” 'பாகீ, தோட்டத்துலே வேப்ப மரத்திலிருந்து ரெண்டு இலை பறிச்சுண்டு வாயேன். எனக்கு எட்டல்லே. நம்மாத் துலே ரஸம் வைக்கிற ஈயச் சொம்பு மாதிரி கட்டை குட்டையா இருக்கேன், நான் என்ன பண்றது?’ "ஏன் அம்மா இப்படி உங்களையே சொல்லிக்கறேள்? அப்படி ஒண்னும் நீங்க இல்லை. உலகத்திலே பொறக்கிற எல்லாரும் ஒரே உசரம், ஒரே மாதிரியிருக்க முடியுமா?” 'அட ராமா, தத்வம், தர்க்கம் எல்லாம் அப்பறம் பண்ணலாமே! வாசல்லே ஜட்கா வண்டிக்காரன் நிக்கறான் என்கிறது ஞாபகம் இருக்கட்டும்.” 'இதோ வந்துட்டேன்!” பாகீரதி பின் கட்டுத் தோட்டத்திற்குப் போனாள். 'அம்மா, இவளுக்கு நிசமாவே நாளாயிடுத்தோ?” “நான் சரியாக் கணக்கு வெச்சுக்கல்லே. அந்த நாளுலே நாங்கள் பெத்த மாதிரியிருக்கா இந்த நாள்? நீ என் வயத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதழ்கள்.pdf/94&oldid=1247192" இலிருந்து மீள்விக்கப்பட்டது