உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இதழ்கள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதழ்கள்

95

இதழ்கள் 95

துலே மூணு மாசத்துப் பொறியா இருக்கறபோதே உன் தாத்தா என் மாமனார்-நீ பொறக்கப் போற நாள், வேளை நட்சத்திரம் மொதக் கொண்டு குறிச்சு வைச்சுட்டு அவர் திடுக்குனு கண்மூடிட்டார். ஆனால் அவர் எழுத்துலே விட்டுப் போன வாக்கு மாத்திரம் இம்மிகூடப் பிசகல்லே. 'டாண்ணு' மணியடிச்சாப்போலே பலிச்சுது.” 'அம்மா, நீ என்னைப் பெத்த பெருமையைக் கேக்கல்லே, இவளுக்கு இப்போ நாளாயிடுத்தோன்னுதான் கேக்கறேன்.” 'யார் என்னத்தைக் கண்டா அப்பா? ஆனால் அந்த நாள் மொதக் கொண்டே மழை பெய்யறதும், மக்கப்பேறும் மகா தேவனுக்குக் கூடத் தெரியாது’ங்ககிற வசனம் சும்மாவா வழங்கி வரது?” 'இந்தப் பொம்மனாட்டிகள் கிட்ட மாத்திரம் நேர்க் கேள்விக்கு நேர் பதில் ஜன்மேதி ஜன்மத்துக்கு வராது!’ அம்மாவுக்கு ஆத்திரம் வந்துவிட்டது. "ஆமா உன் மாதிரி இங்கிலீஷ-ம் கணக்கும் சட்டதிட்ட மாப் படிச்சுட்டு நிக்கல்லே, உன் இஷ்டப்படி பதில் சொல்ல. எனக்கு இப்படித்தான் பேசவரும். உன் கேள்விக்கு வேறென்ன பதில் சொல்ல முடியும்!” ಕh சரி, நம்ம ரெண்டு பேரும் சண்டை போட வேண் டாம்.', பாகீரதி பின் கட்டிலிருந்து வந்தாள். 'தோ பறிச்சுண்டு வந்துாட்டேம்மா.” 'தலைலே வெச்சுக்கோ.” "நீங்க சூட்டிவிடுங்கோம்மா!’ 'சரி திரும்பு; நன்னாருக்கு பூவும் பிஞ்சுமா கொத்தா யிருக்கு. பூவும் காயுமா நீங்க பூக்கற நாள் காய்க்கற நாள் தானே!” 'அம்மா நமஸ்காரம் பண்றேன்.” 'சரி பண்ணு. எத்தனை தடவை பண்ணுவே? சும்மா குனிஞ்சு நிமித்து இப்பொ உடம்பு அலரப்படாது.” "அம்மா, நான் ஏதாவது தப்புப் பண்ணியிருந்தால் மன்னிச்சுடுங்கோ.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதழ்கள்.pdf/95&oldid=1247193" இலிருந்து மீள்விக்கப்பட்டது