பக்கம்:இதழ்கள்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதழ்கள்

97

இதழ்கள் g?

'உங்க அம்மாவுக்குப் பெண்ணாப் பிறந்துாட்டு என்னைத் தர்க்கம் பண்ணறேன்னு சொல்றையா?” 'இப்பொழுது உங்களுக்குப் பெண்டாட்டி!' அவள் நேரே அவன் கண்களையே துருவும் பார்வையுட்ன் பார்த்துக்கொண்டு அம்மாதிரி சொல்கையில் அவனுக்கு அவளைத் தொடவேணும் போல் தோன்றிற்று. வெறுமெனக் கையை மாத்திரம் எங்கே நடுக்கூடத்திலே மறந்து விடு வோமோ என்ற பயத்தில் தன் கைகளைப் பின்னால் கட்டிக் கொண்டான். தாழ்ந்த குரலில், ஸரஸ் மெல்லாம் படுக்கை யறையில்; நடுக்கூடத்தில் அல்ல!” என்றான். வெற்றிப் புன்னகையில் அவள் கன்னங்கள் குழிந்தன. ஒண்ணாச்சு, இப்போ ரெண்டாகப் போறது; இனிமேல் நம்ம ஸரஸ் மெல்லாம் எந்தச் சமயத்தில் எங்கே கிட்ட றதோ? கிட்டின வரைக்கும் லாபம்னு நடத்திக்க வேண்டியது தான்.” "சரி, ரெண்டு குழந்தைகளும் கொஞ்சம் சமத்தா யிருங்கோ, இங்கே நான் கிழவி குத்துக் கல்லாய் இருக்கேன்." அந்தரங்கத்தின் அனுஸ்வரங்கள் எந்தச் சமயத்தில் நேரும் என்று சொல்வதற்கில்லை. நள்ளிரவில் தனியிடத்தில் ‘ந்ானும் நீயுமடி எப்படி எப்படியுமோடி என்று இருக்கு மிடத்தில் இல்லாது, பட்டப் பகலில், நாலு பேர் நடுவில் நடுக் கூடத்தில், ஒரு இடுப்பின் அசைவில், ஒரு பார்வையின் ஒரத்தில், ஒரு தோளின் குலுங்கலில், ஒரு. கன்னத்தின் குழிவில் ஒளிந்து கொண்டு வெளிப்படலாம். அதன் அழசே அதன் ஸ்மய மற்ற தன்மையில்தான் இருக்கிறது! சில பூக்கள் பகலில் பூக்கின்றன; சில இரவில் பூக்கின்றன ஒவ பூக்கள் ரகஸ்யமாய்த் தமக்கே பூத்துக்கொள்கின்றன. தொட்டால் நலுங்கிவிடும் இதழ்கள், கண்ணால் கண்டாலே கசங்கி விடும் இதழ்கள், நெஞ்சின், நினைவில் பட்டாலே நைந்து விடும் இதழ்களும் உண்டோ? கன்னடா திகைப் பூண்டு மிதிச்ச மாதிரி நின்னூட்டே திடீர்னு?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதழ்கள்.pdf/97&oldid=1247195" இலிருந்து மீள்விக்கப்பட்டது