பக்கம்:இதிகாசக் கதாவாசகம்-2.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

}{}{} இதிகாசக் கதாவாசகம். பொருதற்குச் சித்தமானன். அதிவேகமாய் ஓடிவந்த இடிம் பன், தன் கங்கை ஒர் அழகிய நங்கைவேடத்தோடு நிற்ப தைக்கண்டு, அவள் கருத்தை அறிந்துகொண்டு வெகுண்டு, பேதையே! நீ வந்த காரியமென்ன? அதனை நீ மறந்து இந்த மனிதப்பதர்களைக் காதலித்து நிற்கின்ருய்; இதனை நான் அறிந்துகொண்டேன்; நம் குலத்துக்கு அடாப்பழி யைத் தேடத்தொடங்கினையா? நன்ருயிருக்கிறது! புலிப் பினவு மான்கலையை விரும்புவதும் உண்டோ? இராக்கத குலப் பெண்ணுகிய நீ இம்மானிடப் பகர்களையா விரும்பு வது? குலத்தைக்கெடுத்த உன்னேயும் இவர்களுடன் சேர்க் துக் கொன்று தின்கின்றேன்” என்று இடிபோல முழங்கிப் பற்களைக் கடித்து நாவை அதுக்கிப் பாண்டவர்களைக் கொல் லுதற்கு நெருங்கினன். பீமன் உடனே அவனே கித்திரையி விருப்போரிடம் அணுகவிடாது ஒடி எதிர்த்தான். இரு வரும் பல சபதமொழிகள்பகர்ந்து, ஒட்டித்தோள்கொட்டி இறுக கையாற்கட்டி மற்போர் தொடங்கினர்கள். பின்பு மசங்களேயும் மலைகளையும் பிடுங்கி ஒருவரை யொருவர் மோ தினர். இங்கனம் இருவரும் வெல்லலும் தோற்றலுமின்றி நெடுநேரம் சமர் புரிந்தனர். இச்சமயத்தில் கித்திரையி விருக்க சகோதரர்களும் தாயாரும் விழித்து கித்திரை தெளிக் கெழுக்கார்கள். எழுந்தவர்களுள் அர்ச்சுனன் பிமனேப் பார்த்து 'அண்ணு, இந்த அற்பனைக் கொல்வ தற்கு ஏன் இவ்வளவு காலதாமிதம்? சூரியோதய ம்ாகப் போகின்றது; சீக்கிாம் இவனே முடித்த விடுங்கள்; நாம் செல்லவேண்டும்; உங்கட்குக் கஃாப்பு மேலிட்டிருக் தால் என்னிடம் விடுங்கள்” என்ருன். அவ்வளவில் பீமன், யுகாந்த காலத்துச் சண்டமாருதம் போல் பலமிகுந்து,