பக்கம்:இதிகாசக் கதாவாசகம்-2.pdf/106

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பீமன் வல்லபம். 10]. இடிம்பனத்தாக்கிப் பிடித்துப் பலமுறை சுழற்றிப் பூமியில் அறைக்கான். அறையவும் அவன் ஒர் மலை உருள்வது போல் உருண்டு புரண்டு உயிர் துறந்தான். அப்பால் சிறிது நோஞ் சென்ற பின்னர் சூரியன், இடிம்பனது உடலை அக்காட்டிலிருந்து வாழும் பருந்து முதலிய பிராணிகட்கு விருந்திடுவதற்கு எடுத்த விளக்குப் போல் உதயமானன். குந்தியும், தருமன் முதலிய சகோ தரர்களும் "பீமன் எதிர்காலத்தில் நம்பகைவர்களைக்களேந்து நமக்கு நல்வாழ்வளிப்பான்"என்று மகிழ்த்து, அவ்விடத்தை விட்டுப் புறப்பட்டுச் சென்ருர்கள். இடிம்பியும் அவர்களே விடாது பின்பற்றித் தொடர்ந்து சென்ருள். இவ்வாறு தொடர்ந்து வரும் இடிம்பியையும் பீமன், கொல்லுதற்கு முற்பட்டான். அப்போது குத்திதேவியும் தருமனும் 'பெண்கொலே புரிதல் பெரும்பாவம்' என்று கூறித் தடுத் தார்கள். அங்ஙனம் தன்னைப்பற்றி இரக்க மிகுந்த இரு வரையும் இடிம்பி அடிவண்ங்கி, குத்தியைப் பார்த்து பெ ருந்தேவியே! உனது மக்களுள் இதோ நிற்கிற புருஷ ரேஷ்டனுகிய பீமனை நான் கணவனுக வரித்திருக்கிறேன்; இவனே நான் அடையாவிடில் எனது உயிரை உன்முன்னிலை யிலேயே போக்கிக் கொள்வேன்; நீ கருணை கூர்ந்து என் கணவனுகிய இந்த உன்புத்திரளுேடு சேர்த்துவை; என்னே இாாக்கதப் பெண்ணென்று கினைக்கவேண்டாம்; உங்களுக் கு வேண்டிய அடிக்கொண்டுகளையெல்லாம் ஆற்றிக்கொண் டிருப்பேன்; இந்த வனத்தைக் கடப்பதற்கும் உங்களுககு நல்ல உதவியாகவும் இருப்பேன்’ என்று பலவாறு கூறிக் குந்தியைத் தொழுது கின்ருள். இவ்வாறு வருந்தி கிற்கும் இடிம்பியைக் கண்ட குத்தி யும் கருமனும் பீமனுக்குப் பல நீதிகளே எடுத்துமொழிந்து