உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இதிகாசக் கதாவாசகம்-2.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 இதிகாசக் கதாவாசகம், ஒர் புத்திரன் பிறக்கும் வரை இடிம்பியை மனேவியாகக் கொள்” என்று வேண்டினர். பீமனும்அகற்கிசைந்து இடிம் பியை மணந்தான். கியதி கழிந்ததும் இடிம்பியை அவளி ருப்பிடம் அனுப்பி விட்டனர். இடிம்பி கன் வயிற்றிற் பிறந்த கடோற்கசளுேடு தனது வாசஸ்கானம் போய்ச் சேர்ந்தாள். பாண்டவர்களும் தாயும் அவ்விடத்தை விட்டகன்று, சாலிகோத்திர மஹரிஷியின் ஆச்சிரமத்தை யடைந்தனர். அம்மஹரிஷியில்ை அங்கு அவர்கள் நன்கு உபசரிக்கப்பட் டபின், முனிவரது கட்டளையின்படி அவர்கள், தங்களைப் பகைவர் அறியாதிருப்பதற்கு அந்தணர்களுக்குரிய வேடம் புனேத்து, வேகங்களையும் பல சாஸ்திரங்களையும் அவரிடை ஒதியுணர்ந்தார்கள். அங்கு சின்னுள் இவ்வாறு தங்கியிருந்து, பின்னர் அவர்கள் முனிவரிடம் விடைபெற்றுப் புறப்பட் டுப் பல காட்டுப் பிரதேசங்களைக் கடந்து சென்றுகொண் டிருந்தார்கள். இங்ஙனம் சென்று கொண்டிருக்கும் போது இடைவழியில் கங்கள் குலமுதல்வராகிய வியாசமஹா முனிவரைக்கண்டார்கள். கண்டஅவர்கள் முனிவரைக்கொ ழுது, தங்கள் கவலை யெல்லாம் நீங்கப் பெற்றவர்களாய் மகிழ்ந்து கின்ருர்கள். வியாசர் அவர்களை வாழ்த்தி, 'குரு குலசிகாமணிகளே! உங்களைக்கண்டு உங்களுக்குத்தேறுதல் கூறவே இங்கு இப்போது நான் வந்தேன்; இனி நீங்கள் வருந்தவேண்டாம்; நீங்கள் விரைவில் பல நலங்களை அடை யப் போகிறீர்கள்; இவ்வனத்துக்குச் சமீபத்தில் வேத்திர யே மென்றும் எகசக்கிர மென்றும் சொல்லப் படுகின்ற ஒர் ஊர் இருக்கிறது; நீங்கள் அவ்வூரையடைந்து சில நாள் என்