பக்கம்:இதிகாசக் கதாவாசகம்-2.pdf/108

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பீமன் வல்லபம். 103. வாவை எதிர்பார்த்து வாழ்ந்திருங்கள்” என்று சொல்லி, அவர்களே வேத்திரகீயத்துக்கு அழைத்து வந்து, ஒர் அந்த ணன் வீட்டில் குடியிருக்கும்படி செய்து விட்டுத் தாம் செல்லுமிடத்துக்குச் சென்ருர். பாண்டவர்கள் தங்கி யிருக்க வீட்டிற்குரிய பிராம ணன், அவர்கள் மீது மிகுந்த அன்பு பூண்டு உபசரித்து வங் தான். பீமன் முதலிய இளைஞர் கால்வரும், தருமனேயும் குக்தியையும் வீட்டில்வைத்து விட்டுத் தாங்கள் அந்தணர்க எது இல்லங்கள் தோறுஞ்சென்று பிச்சையெடுத்து வந்து தாயாரையும் அண்ணனையும் உண்பித்து வந்தனர். பிரம சாரிகளாய்ப் பிச்சை யெடுக்கும் அவர்களைக் கண்ட நகரத்து ஜனங்கள், 'சாஜபோக்கியங்களை அதுபவிப்ப தற்குரிய சுகுமாரமான தேகத்தையும் அரசர்கட்குரிய அங்க இலக் கனங்களையு முடைய இவர்கள் உண்மையில் பிராமணர்க ளல்லர்; இவர்கள் ஏதோ ஒர்காரியார்த்தமாக இங்கியதியை யுடையவர்களாகக் காணப்படுகின்ருர்கள்”என்று சொல்லிச் சந்தேகித்தனர். நகரத்துப் பெண்டிர்கள் இனிய பசுணங் களையும் உணவுகளையும் பாண்டவர்களது பிச்சைப் பாத்தி ாத்தில் அன்போடு இட்டு நிரப்பினர்கள். குந்திதேவி தன் மக்கள் பிச்சை யெடுத்தத் திரும்பி வரும்வரை விசனத்தி ல்ை தரையைக் கையால் கீறிக் கண்ணிர்விட்டுக் கொண்டி ருப்பாள். அவர்கள் வந்ததும் அவர்கள் கொண்டுவந்த உண வை இரண்டாகப் பகிர்ந்து, ஒருபாதியைப் பீமனுக்குக் கொடுத்து விட்டு, ஒருபாதியை மற்றப்பிள்ளைகளும் தானு மாக உண்பாள். இப்படிப் பகிர்ந்து கொடுக்கும் பாதி உண