பக்கம்:இதிகாசக் கதாவாசகம்-2.pdf/110

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பீமன் வல்லபம் 105 களிலும் செய்நன்றி போற்று தலைப்போல் சிறந்ததோர் செயலுமில்லை; அங்கன்றியை மறத்தலிலும் மிக்க பாவமு மில்லை. எந்நன்றி கொன்ருக்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்க் நன்றி கொன்ற மகற்கு” - என்பது அறஅால் விதியாகும்; ஆதலான் இவ்வமையத் தில் இவர்களுக்குற்றதை வினவியறிந்து நாம் நம்மாலியன் றகைச் செய்தே தீரவேண்டும்'என்று இாக்கமிகுதியாற் கூறினுள். பீமன் அதனைக் கேட்டு, 'தாயே இப்பிராமண அக்கு எவ்வித இடுக்கண் யாரால் நேர்ந்ததென்பதை மாத் திரம் விசாரித்துச்சொல். அது எவ்வளவு அசாத்தியமான தெனினும் ஒரு கொடியில், சீக்கிவிடுகிறேன்' என்று பெரு மிகத்தோடு பேசினன். இவ்வாறு இவர்கள் இருவரும் சம்பாஷித்துக்கொண் டிருக்குங்கால், மறுபடியும் வீட்டினுள் அழுகையொலி கேட்டது. உடனே குந்தி விரைவாக விட்டினுள் சென் ருள். அவ்வமையம், பிராமணன் தன் மனைவியைப் பார்த்து, பெனனே, எது சேடிமமான இடமோ அங்கே போய் விடலாமென்று முன்னமே உனக்குச் சொன்னேனே, அதனை நீ கேட்டாயில்லை; இப்போதோ கடக்க முடியாக ஆபத்து நேரிட்டுவிட்டது: இனி என் செய்வது? உசலுக் குள் அகப்பட்டுக்கொண்டு உலக்கைக்குப் பயப்படுவதால் ஆவதென்ன? ஆபத்துக்கிடமான இந்த நகரத்தை விட்டு விடலாமென்ற கால த்தில் ,ே இது பிறந்த ஊர், வளர்ந்த ஊர், தாய் தந்தை சுற்றத்தாரையெல்லாம் விட்டு எப்படிப்