பக்கம்:இதிகாசக் கதாவாசகம்-2.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 இதிகாசக் கதாவாசகம். பிரிகிறது என்றெல்லாம் சொல்லிப் புறப்படமாட்டே னென்ருப்; இப்போது எனக்கோ என் மகனுக்கோ மரணம் வந்திருக்கிறது. நம்மகனுக்கு அம்மாணம் வராதிருத்தற்கு, நானே அம்மாணத்துக்கு இலக்காவேன்; பெண்களுக்குரிய குணநலம் நிரம்பிய உன்னை இப்போது இழப்பதென்ருலோ அது முடியாது. நமக்கு மகளும் இருக்தியே; அவ ளும் பிதிர்க்கடனுற்றுகற்குரிய தெளகித்திரர்களைப் பெறு தற்குரியவள்; அஃதன்றியும் அவள் அவளது மணவாள லுக்குச் சுதந்தாமானவள; ஆகையால் அவளேயும் இழக்க முடியாது; இவ்வாபத்துக்கீடாக நான் வேறு எந்தப்பந்து வையும் இழக்கல் முடியாது; கடைசியாக முன் துணிந்த படியே என் ஆத்மாவையே தியாகம் செய்வேனென்ருல் என் பிரிவினுலும் பாதுகாப்பாரின்மையாலும் நீங்கள் உயிர் வாழ்ந்திருக்க மாட்டீர்கள்; என் செய்வேன்'இறப்பதற்குக் துணியினும் அதிலும் சங்கடமிருக்கிறதே அந்தோ! இனிச் செய்வது என்ன” என்று மிக்க விசனத்தோடு சொல்லிப் புலம்பினன். அதற்கு அவளது மனேவியாகிய பார்ப்பனி, 'பிராணநாயகரே காங்கள் வருந்துவது ககாது. கங்களைப் பிரிந்து நான் இருப்பதில் ஒரு சுகமுமில்லை; உலகத்தில் பிறந்தோரெல்லாம் இறந்தவர்களே; நானே ஒர் மகனையும் மகளையும் பெற்று என் கடனை நிரப்பிவிட்டேன்; அப்பிள்ளை களைக் காப்பதற்கு நீர் அவசியம் உயிரோடிருக்கவேண்டும்; நானே இப்போது வந்திருக்கும் ஆபத்துக்குப் பாத்திர மாகிறேன்; தம் உயிரையும்விட்டு நாயகர்களுக்கு நலம் செய்யவேண்டுவதே பெண்களுககுரிய முக்கிய தர்மமாகும். அப்படிச் செய்வது பாலோகத்துக்குரிய கர்மமும், இவ்வுல கத்துக்குரிய புகழுமாகும்; உலகத்தில் கணவனையிழந்து