பக்கம்:இதிகாசக் கதாவாசகம்-2.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யயாதி காபதி. 23. தயத்தை எதிர்பார்த்திருக்கும் சகோரம் போல் நின்று கொண்டிருந்தாள். இச் சமயத்தில் ஊழ்வினை வந்து உருத்தமையால், யயாதியும் சன்மிஷ்டையை கினேந்து நினைந்து, கித்திரை யின்றித் தெய்வயானையின் அந்தப் புரத்தினின்றும் நீங்கி, அசோகவனிகை சோலைப் பக்கமாக வந்தான். தனியாய் வரும் அரசனேக் கண்டதும் சன்மிஷ்டை, மந்தகாசமான முகத்துடன் அரசனெதிர் சென்று கைகளைக் குவித்து வணங்கி “அரசே! உம்மையன்றி வேறெவரையும் என் சிங் கையில் கினையாதிருக்கின்றேன்; நீரோ என்னைச் சிறிதும் கினையாதிருக்கின்றீர்; ரூபத்தினுலும், குலத்தினுலும், ஒழுக் கத்தினுலும் யான் எப்படிப் பட்டவளென்று நீரே அறிவீர். அரசே! இப்போது என் வேண்டுகோளை நிறைவேற்ற வேண்டும்,' என்று சொல்லிப் பிரார்த்தித்தாள். இவ்வாறு சன்மிஷ்டை கூறியதைக் கேட்ட யயாதி, பெண்ணே உனது அழகின் மேன்மையும், ஒழுக்கத்தின் சிறப்பும் குலத்தின் உயர்ச்சியும் முன்னரே நான் நன்கு அறிந்தவைகளே, உன்னே நான் பார்த்த நாள் முதலாக உன்னைக் கணப்பொழுதும் மறந்ததில்லை; என்னே நீர் கினையாதிருக்கின்றீர் என்றன. அது உண்மையே; உன்னே நான் மறந்திருந்தாலல்லவோ நினைக்கப் போகின்றேன்; சுக்கிராச்சாரியாரிடம் கூறிக் கொண்ட உறுதிமொழிகளா லேயே உன்னே இதுவரை அணுகமுடியாதவனுக விருக்கின் றேன். என் செய்வேன்! பெண்ணே' என்று இரங்கிய மொழிகளால் விடை பகர்ந்தான்.