பக்கம்:இதிகாசக் கதாவாசகம்-2.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

等 யயாதி காபதி. பேறு மவற்றுள் யாமறிந்த தில்லையறிவறிந்த, மக்கட்பே றல்ல பிற” 'தம்டோருள் என்பதம் மக்கள் என்பவை அறவுரைகளன் ருே? ஆகையால் புத்திர செல்வக் தையே பாலித்தருளும்” என்று கேட்டாள். பின்பு அரசன் அதனை மறுக்கும் வழி காணுது, ஈகென்ன! “கர்ம சங்கடமானதே; எனக் கவலேகொண்டு கடைசியாக இசைந்து சுக்கிரர் கட்டளையைத் துறந்து, சன் மிஷ்டையை அவளிஷ்டப்படி ஏற்றுக்கொண்டான். அன்று முதல் இருவரும் தெய்வயானை அறியாதபடி இன்புற்று வாழ்ந்து வந்தனர். நாளடைவில் சன்மிஷ்டை ஆயு, அது என்னும் இரண்டு புதல்வர்களையும் கடைசியாகப் பூரு என் ருெரு புண்ணியப் புதல்வனேயும் பெற்று மகிழ்ந்தாள். சிறிது காலஞ் சென்ற பிறகு ஒரு நாள் தெய்வயானை யயாதியுடன் அசோகவனிகைக்குச் சென்ருள். அப்போது அவ்வனத்தில் தேவ குமாரர்களைப் போல் அச்சமின்றி விளையாடும் சன்மிஷ்டையின் குழந்தைகளை அவள் கண் டாள். அக் குழந்தைகள் தனது கணவனுகிய யயாதி யின் உருவச் சாயலோடு காணப்படுவதை யறிந்து, சங் தேகங் கொண்டு, யயாதியை நோக்கி, அரசே இப் பிள்ளைகள் யார்? ஒளியிலும், அழகிலும் உம்மைப்போலவே கோன்றுகின்ருர்கள்; உண்மை யென்ன? சொல்ல வேண்டும்” என்று கேட்டாள். அப்போது குழந்தைகளின் செவிலித் தாயார்கள் குழந்தைகளின் அருகில் சென்று, "நாங்கள் ஒரு முனிவரின் புத்திரர்கள் என்று சொல்லுங்